திங்கள். ஆக 19th, 2019

மதம் சார்ந்த இடங்களிலும் பாலியல் தொல்லை தடுக்கணும்..

பணி இடங்களில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதை தடுக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் அளித்த பரிந்துரைகளை, ஆசிரமம், மதரசா, கத்தோலிக்க நிறுவனங்களிலும் அமல்படுத்த வேண்டும்’ எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ராஜஸ்தானில், 1997ல், குழந்தை திருமணங்களை தடுக்க முயற்சித்த, அரசு பெண் ஊழியர், பன்வாரி தேவியை, உயர் வகுப்பு நிலச்சுவான்தார்கள் பலர், கூட்டாக சேர்ந்து, பல முறை பாலியல் பலாத்காரம் செய்தனர்.இது தொடர்பாக, ‘விசாகா’ எனப்படும் பெண்கள் உரிமை அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பணி இடங்களில் பாலியல் பலாத்கார அத்துமீறல் மற்றும் பலாத்கார சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில், பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. அவை, விசாகா பரிந்துரைகள் என அழைக்கப்படுகின்றன.கடந்த, 2013ல், பணி இடங்களில் பெண்கள் மீதான அத்துமீறல்களை தடுக்கும் சட்டம் இயற்றப்படும் வரை, விசாகா பரிந்துரைகள் அமலில் இருந்தன.இந்நிலையில், சமூக ஆர்வலர் மகேஷ் பதக், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நலன் மனுவில், ‘விசாகா பரிந்துரைகளை, ஆசிரமம், மதரசா, கத்தோலிக்க நிறுவனங்கள் ஆகியவற்றிலும் அமல்படுத்த வேண்டும்’ என, கோரி உள்ளார்.அந்த மனுவில், ‘ஆசிரமம், மதரசா, கத்தோலிக்க நிறுவனங்கள் ஆகியவையும் பணி இடங்களே. அங்கு பல பெண்கள் வேலை செய்கின்றனர். இந்த பெண்களிடம் பாலியல் அத்துமீறல் நடப்பதை தடுக்க வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது.சாமியார் மீது பாலியல் வழக்குடில்லியில், கோவில் ஒன்றை நிர்வகித்து வரும், பிரபல சாமியார், தாதி மஹராஜ் மீது, அவன் நடத்தி வரும் ஆசிரமத்தில் உள்ள பெண், பாலியல் பலாத்கார புகார் கூறியுள்ளார்.இந்த வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றும்படி, சமீபத்தில், டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தாதி மஹராஜ் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்