செவ். அக் 22nd, 2019

தினமும் 10 இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் மரணம்.

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களில், சராசரியாக, தினமும், 10 பேர் உயிரிழப்பது தெரிய வந்துள்ளது. வளைகுடாவில் உள்ள, பஹ்ரைன், ஓமன், கத்தார், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். இந்த நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் நிலை குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேட்கப்பட்ட கேள்விக்கு காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பு, ஆய்வு அறிக்கை அளித்துள்ளது.

இந்த அமைப்பை சேர்ந்த வெங்கடேஷ் நாயக் கூறியதாவது:

பஹ்ரைன், ஓமன், கத்தார் மற்றும் சவுதியில் உள்ள இந்திய அமைப்புகள் அளித்த தரவுகளின் அடிப்படையில், இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உலகளவில் வசிக்கும் இந்தியர்கள் நம் நாட்டுக்கு அனுப்பும், தொகையில் பாதியை, வளைகுடா இந்தியர்கள் அனுப்புகின்றனர். கடந்த, 2012 முதல் 2018, ஜூன் வரை, 24,570 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். வளைகுடா நாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு ஏழு கோடி ரூபாய்க்கும், 117 பேர் வீதம் உயிரிழக்கின்றனர். அதாவது தினமும், 10 பேர் உயிரிழக்கின்றனர். இதன் மூலம், வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்