செவ். ஜூன் 18th, 2019

சிறுநீரக கல் கரைய.

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
சிறுநீரக கல் கரை
———————————————————
காய் : கத்தரிக்காய்
—————————————————-
சத்துக்கள்
————-
——-
விட்டமின் B2 , C , B6 , தையமின் , நியசின் , மெக்னீசியம் , பாஸ்பரஸ் , காப்பர் , பொட்டாசியம் , மங்கனீசு , கால்சியம் , இரும்புச் சத்து , போலிக் ஆசிட் , நார்ச் சத்து

தீர்வு
———————————
ஒரு இளம் பிஞ்சு கத்தரிக்காயை
(வரியுள்ள , விதையுள்ள காய்) எடுத்துக்கொண்டு ஒரு 10 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறப்போட்டு பின்பு எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் கோவக்காய் (10) ,ஒரு எலுமிச்சம்பழத்தின் தோலை நறுக்கி போட்டு , மிளகு(2) , கொஞ்சம் மஞ்சள் தூள் , தேவையெனில் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

பீர்க்கங்காய் கொடியின் வேர்ப் பகுதியைச் சேகரித்து- நன்கு உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தினம் இருவேளை இரண்டு சிட்டிகை அளவுக்கு எடுத்து சுடுநீரில் கலந்து உண்டு வர நாளடைவில் சிறுநீரகக் கற்கள் வெளியேறும்.

ஏலக்காய் , தனியா , நெருஞ்சில் இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் பொடியைப் பாலில் கலந்து காலை மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————-
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
சனி 15 டிசம்பர் 2018

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3
மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்