ஞாயிறு. மே 26th, 2019

சளி , இருமல் ,படுக்கையில் சிறுநீர் கழிதல் குளைபாடு நீங்க.

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
சளி , இருமல் ,படுக்கையில் சிறுநீர் கழிதல் குளைபாடு நீங்க

காய் :
தேங்காய் + பேரீச்சை

———————-
சத்துக்கள்
———
வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன

தீர்வு
——
தேங்காய் துருவல் (1 மூடி)
பேரீச்சை கொட்டை நீக்கியது
(100 கிராம்)
தேன் (50 மி.லி)
ஏலக்காய் (2)
கொத்தமல்லித் தழை (ஒரு கைப்பிடி)

செய்முறை
————
முதலில் தேங்காயை துருவி வைத்துக்கொண்டு பின்னர் பேரீச்சையை நறுக்கி இரண்டையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அதனுடன் ஏலக்காய் , மல்லித்தழை , தேன் இவை மூன்றையும் சேர்த்து அரைத்து விழுதாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை மதியம் இரவு என மூன்றுவேளையும் நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் சளி ,இருமல் , படுக்கையில் சிறுநீர் கழிதல் குறைபாடு நீங்கும்.

மாதுளம் செடியின் பட்டையை காயவைத்து பொடித்து வைத்துக்கொண்டு அவற்றில் 10கிராம் பொடியை எடுத்து 50 கிராம் தேனை கலந்து அதனுடன் நெல்லிக்காய் மற்றும் கருஞ்சீரகம் தலா 25 கிராம் எடுத்து அரைத்து அதனுடன் கலந்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை என இருவேளையும் 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் படுக்கையில் சிறுநீர் கழிதல் குறைபாடு நீங்கும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————–
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
——-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமூதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
வியாழன் 07 பிப்ரவரி 2019

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்