திங்கள். ஏப் 22nd, 2019

உடல் பருமன் மற்றும் அதிக கொழுப்பு பிரச்சனைகள் தீர.

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

கீரைகள் “நடமாடும் சித்தர்கள்”

தலைப்பு :
————

உடல் பருமன் மற்றும் அதிக கொழுப்பு பிரச்சனைகள் தீர
————————————————————

கீரை : வெங்காயத் தாள் நெய்
——————————-

தேவையான பொருட்கள்
————————-

வெங்காயத் தாள் (நறுக்கியது) – 500 கிராம்
சுத்தமான நெய் – ஒரு கிலோ

செய்முறை
————

வெங்காயத் தாளை பொடியாக நறுக்கி அதனுடன் சிறிது நீர் சேர்த்து அரைத்து சாறு எடுத்து வடிகட்டி , வாணலியில் ஊற்றிக் காய்ச்சி நான்கில் ஒரு பங்காகச் சுண்டியதும் அதனுடன் ஒரு கிலோ நெய்யை சேர்த்து காய்ச்சி இறக்கி வைத்துக்கொள்ளவும்.

செய்முறை
————

இந்த நெய்யை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டு. வந்தால் உடல் பருமன் மற்றும் அதிகக் கொழுப்பு போன்ற பிரச்சனைகள் தீரும்.மேலும் இதயநோய் உள்ளவர்களுக்கு இந்த நெய் மிகவும் நல்லது.

நன்னாரி வேரை (100 கிராம்) , நெல்லிக்காய் சாற்றில் (500 மில்லி) ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு கரையும் . இதயம் வலுவடையும்.


இரவு படுக்கப் போகும் முன்

——————————
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
——-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமூதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
வியாழன் 14 பிப்ரவரி 2019

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்