ஞாயிறு. மார்ச் 24th, 2019

நாட்பட்ட மற்றும் தீராத பலவிதமான நோய்களை குணமாக்கும் அற்புதமான சூப்

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து …!

உணவை மருந்தாக்கு…..!_
மருந்தை உணவாக்காதே…..!

கீரைகள் “நடமாடும் சித்தர்கள்”

தலைப்பு :
————

நாட்பட்ட மற்றும் தீராத பலவிதமான நோய்களை குணமாக்கும் அற்புதமான சூப்
————————————————————————————–

கீரை : பசலைக்கீரை சூப்
—————————

தேவையான பொருட்கள்
——————————————

பசலைக் கீரை. – ஒரு கட்டு
உளுந்து. (வறுத்தது) – 1 ஸ்பூன்
தக்காளி – 2
வெங்காயம் – ஒன்று
பூண்டு. – 10 பல்
இஞ்சி – ஒரு துண்டு
கொத்தமல்லி. – ஒரு கைப்பிடி
புதினா – ஒரு கைப்பிடி
மிளகு. – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
உப்பு , மஞ்சள் , எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
————

பசலைக் கீரையை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய தக்காளி , வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

அடுத்து பூண்டு , இஞ்சி , கொத்தமல்லி , புதினா , மிளகு , சீரகம் , மஞ்சள் ,உளுந்து ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து தக்காளியுடன் சேர்த்து வதக்கவும்.

கடைசியாக கீரையையும் அதனுடன் சேர்த்து வதக்கி ஆறு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பாதியாக சுண்டச் செய்து அதனுடன் தேவையான உப்பு சேர்த்துஇறக்கிவைத்து குடிக்கவும்.

இரவு படுக்கப் போகும் முன்
——————————

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
——-

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமூதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
வியாழன் 21 பிப்ரவரி 2019

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்