புதன். ஆக 21st, 2019

‘நோட்டா’வுக்கு ஓட்டு 2500 குடும்பங்கள் முடிவு.

தஞ்சாவூர்-
தேர்தலுக்காக வீடியோ எடுக்கும் பணியை, தனியாரிடம் வழங்கியதால், தஞ்சை போட்டோ, வீடியோகிராபர் சங்கத்தினர், 2,500 பேர், குடும்பத்துடன், ‘நோட்டா’விற்கு ஓட்டு போட, முடிவு செய்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில், பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனையில் ஈடுபடும் போது, ஒப்பந்த முறையில் வீடியோக்கள் எடுக்கப்பட்டு, அந்த பதிவுகள், தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதற்கான ஒப்பந்தம், உள்ளூர் போட்டோ, வீடியோகிராபர் சங்கங்களுக்கு அளிக்கப்படும். ஆனால், தற்போது, இந்த ஒப்பந்தம், தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, அனைத்து மாவட்டங்களிலும் எதிர்ப்பு கள் கிளம்பின.
தஞ்சையிலும், உள்ளூர் வீடியோ கிராபர்கள், அந்த தனியார் நிறுவனத்திற்கு வீடியோ எடுக்க செல்ல மறுத்து விட்டனர்.
அவர்கள் கூறியதாவது:
கடந்த, 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பணியாற்றிய, தஞ்சை போட்டோ, வீடியோ கிராபர்களுக்கு, இதுவரை பல லட்சம் ரூபாய் பாக்கியுள்ளது.
அப்போதைய தேர்தலின் போதும், கலெக்டராகவும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலராகவும், தற்போதுள்ள அண்ணாதுரை தான் இருந்தார். அவரிடம் பலமுறை பணம் கோரிக்கை வைத்தும், இதுவரை பணம் வழங்கப்படவில்லை.
மேலும், தற்போது, வெளியூர் நபர்களுக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து, தஞ்சையில் நடக்க உள்ள சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில், மாவட்டத்தில் உள்ள, 2,500 புகைப்பட கலைஞர்களும், அவர்கள் குடும்பத்தினரும், சுமார், 8,500 ஓட்டுகளை, நோட்டாவிற்கு போட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Thanks to https://www.dinamalar.com/district_detail.asp?id=2233958.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்