செவ். அக் 22nd, 2019

கருப்பை கட்டிகளை நீக்கி கருப்பையை பலப்படுத்தவும் மற்றும் குழந்தையில்லா குறைபாட்டை சீர் செய்ய உதவும் அற்புதமான பாயாசம்.

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

கீரைகள் ” நடமாடும் சித்தர்கள் ”

தலைப்பு :
————–

கருப்பை கட்டிகளை நீக்கி கருப்பையை பலப்படுத்தவும் மற்றும் குழந்தையில்லா குறைபாட்டை சீர் செய்ய உதவும் அற்புதமான பாயாசம்
——————————–

சோற்றுக் கற்றாழை பாயாசம்.
————————————————

தேவையான பொருட்கள்
——————————————

சோற்றுக் கற்றாழைச் சோறு – கால் கிலோ
முந்திரி பருப்பு. – 10
பாதாம் பருப்பு. – 10
உலர் திராட்சை – 10 கிராம்
சிறு பருப்பு. – 100 கிராம்
ஏலக்காய். – 5
நாட்டுச்சக்கரை – 100 கிராம்
நெய் – ஒரு ஸ்பூன்

செய்முறை
—————————–

முதலில் சோற்றுக் கற்றாழையின் சோற்றை அரிசி கழுவிய நீரில் முறைப்படி கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும் .

சிறு பருப்பை குழைய நன்கு வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை ஒன்றிரண்டாக பொடித்து போட்டு அதனுடன் ஏலக்காயையும் , உலர்திராட்சையையும் சேர்த்து கொள்ளவும். அதனுடன் சோற்றுக் கற்றாழைச் சோறு மற்றும் மசித்து வைத்துள்ள சிறு பருப்பு சேர்த்து வேக வைக்கவும்.நன்றாக வெந்தவுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து வேகவைத்து பாயாச பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ளவும்.

பயன்கள்
—————————-

இந்த பாயாசத்தை தொடர்ந்து குடித்து வந்தால் கருப்பையில் உண்டாகும் கட்டிகளை கரைத்து கருப்பையை பலப்படுத்தும் மற்றும் குழந்தையில்லா குறைபாட்டை சீர் செய்ய உதவும் அற்புதமான பாயாசம்.

இரவு படுக்கப் போகும் முன்
———————————————-

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
————————

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமூதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
செவ்வாய் 19 மார்ச் 2019

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்