செவ். அக் 22nd, 2019

2 வயது மகனை கொன்று – தாய் தற்கொலை…!

அரியலூரில், 2 வயது மகனை கொன்று, தாய் தற்கொலை செய்தது குறித்து, ஆர்.டி.ஓ., விசாரிக்கிறார்.
அரியலூர், புது மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர், ஜெய்குமார், 46. இவர், ‘டாடா ஏஸ்’ ஆட்டோவை வைத்து, தொழில் செய்து வருகிறார்.இவரது முதல் மனைவி, ராஜலட்சுமி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு, விக்னேஷ் என்ற மகன் உள்ளார். ஜெய்குமார், மூன்று ஆண்டுகளுக்கு முன், நாகப்பட்டினம், குத்தாலம் அருகே உள்ள, மேலசாலை கிராமத்தைச் சேர்ந்த, கணவனை இழந்த பெண்ணான, சுமிதா, 37, என்பவரை, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, ரித்திஷ், 2, என்ற மகன் இருந்தார்.ஜெய்குமார், தினமும் மது அருந்தி வந்து, தகராறில் ஈடுபட்டதால், அவரை பிரிந்து, சுமிதா, தன் தாய் வீட்டில் வசித்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன், ஜெய்குமார், அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்து, சமாதானம் செய்து, சுமிதாவை வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால் மீண்டும், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தியடைந்த சுமிதா, நேற்று, வீட்டில், தன் மகன் ரித்திஷை, சேலையால் தூக்கிட்டு கொலை செய்து, தானும், மின்விசிறி கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, சுமிதாவின் தாய், அமுதா கொடுத்த புகாரின்படி, கயலாபாத் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணையும் நடந்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்