ஞாயிறு. ஏப் 21st, 2019

- மு.ஷாஜஹான்.

இலங்கை பிரதமராக ராஜபக்ஷே பதவியேற்பு…!

கொழும்பு:
இலங்கையின் பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந் ராஜபக்ஷே பதவியேற்றுள்ளார். இலங்கையின் பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவி வகித்து வந்தார்.தற்போது அவர் அப்பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.அதிபர் சிறிசேன கட்சியும் இலங்கை அரசியலில் இருந்து விலகியது. இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன முன்னிலையில் முன்னாள் அதிபர் மஹிந் ராஜபக்ஷே புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
ரணில் விக்ரமசிங்கே இந்தியாவில் சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பிய நிலையில் இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவை அடுத்து பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

உணவிலும் மாற்றம்…! உடலிலும் மாற்றம்…!

அன்புடன் அழைக்கின்றோம்
கோவை
தமிழ்பாரதி இயற்கை அங்காடி
நடத்தும்

கோவை பாலாவின்

காயமே(உடலே) மருத்துவர் !!
காய்கறிகளே மருந்து !!!

உணவை மருந்தாக்கு!!!
மருந்தை உணவாக்காதே !!!

என்னும் தலைப்பில் வாரந்தோறும் வார இறுதி நாட்களில் நடைபெறும் வாழ்வியல் நிகழ்ச்சி.

12 காய்கறிகளைக் கொண்டு உடலின் பிணிகளிலிருந்து விடுபடும் வாழ்வியல் நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்வு .

உணவிலும் மாற்றம் !!!
உடலிலும் மாற்றம் !!!!

என்ற கோட்பாட்டின் படி இந்த வாரம்
பாரம்பரிய காய்களைக் கொண்டு உடம்பில் உண்டாகும் குறைபாடுகளை சரி செய்வது எப்படி என்பதை பற்றியும். உண்ணும் உணவு முறை மற்றும் வாழும் வாழ்வியல் முறைகளை மாற்றுவதன் மூலம் எப்படி நிவர்த்தி செய்யலாம் !!!

“” இரண்டாம் நிகழ்வின் நிகழ்வு – 7″”

தலைப்பு. : முருங்கை

அறிந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
தொடர்புக்கு:
இடம் : தமிழ் பாரதி,.இயற்கை அங்காடி.
திருச்சி மெயின் ரோடு,
பெர்க்ஸ் ஆர்ச் அருகில்
கோயமுத்தூர்.
நாள் : சனிக் கிழமை (27.10.2018)
நேரம் : மாலை 6.00 மணி
அனுமதி இலவசம்

திரு.கருணாநிதி அவர்கள்
ph ; 9443002969 / 7810852230

பாதி மாயம் மீதி பிரசாதம்…!

வாமிக்கு நைவேத்யம் செய்யும்போது, ‘இதை மட்டும் இவரே சாப்பிட்டு விட்டால், யாராவது அடுத்து நைவேத்யம் செய்வரா…’ என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. ஆனால், உண்மையிலேயே ஒரு கோவிலிலுள்ள நரசிம்மர், அவருக்கு பிடித்த பானக நைவேத்யத்தில், ஒரு பகுதியை குடித்து, மீதியை நமக்கு பிரசாதமாகத் தருகிறார்.
பானக்கால நரசிம்மர் என்ற பெயர் கொண்ட இவர், ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலுள்ள மங்களகிரியில் கோவில் கொண்டிருக்கிறார்.
நமுச்சி என்ற அசுரன், பிரம்மாவிடம், ஈரமான அல்லது காய்ந்த பொருட்களால் தனக்கு அழிவு ஏற்படக் கூடாது என்று வரம் பெற்றான்.
இதை பயன்படுத்தி, அவன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்தான். இந்திரன், விஷ்ணுவைச் சரணடையவே, அவர் சக்கரத்தை ஏவினார். கடலில் மூழ்கி, நுரையில் புரண்டு, ஈரம் போலவும், காய்ந்தது போலவும் காட்சியளித்தது.
அது, சீறிப் பாய்ந்து, அசுரனின் தலையை அறுத்தது.
நமுச்சியை வதம் செய்த, விஷ்ணு, உக்கிர சக்தி மாறாமல் நரசிம்ம வடிவத்தில், மங்களகிரியில் தங்கினார். அவரை சாந்தப்படுத்த வெல்லம், எலுமிச்சைச் சாறு கலந்த பானகம் அளிக்கப்பட்டு வருகிறது.
குடம் குடமாக பானகம் குடிப்பவர் என்பதால், இவருக்கு, ‘பானக்கால நரசிம்மர்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.
நரசிம்மரின் சிலை, அகன்ற பித்தளை வாயுடன் உள்ளது. இந்த வாயில் நான்கைந்து சட்டி பானகத்தை ஊற்றுவார் , அர்ச்சகர். அப்போது, ‘மடக் மடக்’ என்னும் மிடறல் சத்தம் கேட்கும். குறிப்பிட்ட அளவு குடித்ததும், சத்தம் நின்று விடும்.
பின், பாதியளவு பானகம் நரசிம்மரின் வாயில் இருந்து வெளியேறும். அதை பாத்திரத்தில் பிடித்து பிரசாதமாக தந்து விடுவர். கோவிலிலேயே பானகம், விற்பனைக்கு வைத்துள்ளனர்.
கோவிலின் பின்புறம், லட்சுமி தாயார் சன்னிதி உள்ளது. நரசிம்மர் சன்னிதிக்கு வெளியே, ஒரு குகை வாசல் உள்ளது. இதில், விஷ்ணு சிலை இருக்கிறது. இந்த குகை, 9 கி.மீ., துாரம் கொண்டது. உண்டவல்லி என்னும் இடத்திலுள்ள, 25 அடி நீள ரங்கநாதர் சிலையை, இந்த பாதை சென்றடைகிறது. பாதுகாப்பு கருதி, குகை வாசல் மூடப்பட்டுள்ளது.
மலை அடிவாரத்தில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு, 11 நிலை கொண்ட, 153 அடி உயர கோபுரம் உள்ளது.
இந்த நரசிம்மர், பாண்டவர்களில் மூத்தவரான, தர்மரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். 108 சாளக்கிராம கற்களால் ஆன மாலை அணிந்திருக்கும் இவர், பட்டுபீதாம் பரதாரியாக காட்சி தருகிறார். ராஜ்யலட்சுமி தாயார் இங்கு அருள்கிறாள்.
விஜயவாடா- குண்டூர் சாலையில், 12 கி.மீ., துாரத்திலும், குண்டூரில் இருந்து விஜயவாடா வழியில், 21 கி.மீ., துாரத்திலும் மங்களகிரி பானக்கால நரசிம்மர் கோவில் உள்ளது.
பானக நரசிம்மர் இருக்கும் மலைக்கோவில், காலை, 6:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரையிலும், அடிவாரக் கோவில், காலை, 6:00 மணி முதல் மதியம், 12:30 மணி வரையும், மாலை, 4:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரையும் திறந்திருக்கும்.

நன்றி – தி.செல்லப்பா.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

மூட்டு வலி.

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
மூட்டு வலி

—————————-

சத்துக்கள்
——————–
புடலங்காயில் விட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன. மேலும் இக்காய் அதிக அளவு நார்சத்து, புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

தீர்வு
————
– ———-
புடலங்காய் (100 கிராம் தோல் , விதையுடன் ), வாழைக்காய் (இளம் பிஞ்சு சிறியது (1) , தேங்காய் (துருவியது 50 கிராம்), இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக்கி காலை மற்றும் மாலை என இருவேளையும் உணவாக எடுத்துக்கொள்ளவும்.

பின்பு பசி எடுத்தால் வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளலாம்.

மதியம் வேளை உணவில் புடலங்காய் ,வாழைக்காய் இரண்டையும் தேவையான அளவு எடுத்து நீராவியில் வேகவைத்து அதனோடு தேங்காய் சேர்த்து பொறியலாக சாப்பிட்டு வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-

(https://www.facebook.com/keezhmandur/
வியாழன் 25 அக்டோபர் 2018

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

முல்லை பெரியாறில் புதிய அணை ஆய்வுக்கு அனுமதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – தமிழகம் முடிவு.

-முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக, புதிய அணை கட்டும் வகையில், அதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த அனுமதி கோரும், கேரள அரசின் மனுவை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்றுள்ளது. கடும் எதிர்ப்பை மீறி, இந்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது, தமிழக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் பாயும் முல்லை பெரியாறில், கேரள மாநிலம், இடுக்கியில், முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இதை, தமிழக அரசு பராமரித்து வருகிறது. இந்த அணையில், 142 அடி உயரத்துக்கு தண்ணீரை சேமித்து வைக்க, தமிழக அரசுக்கு அனுமதி அளித்து, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

கேரள எல்லைக்குள் இருந்தாலும், இந்த அணை, தமிழக அரசுக்கு சொந்தமானதாகவும், அதன் பராமரிப்பில் இருப்பதையும், கேரள அரசு விரும்பவில்லை. நீண்ட காலமாக, இந்த அணைக்கு எதிரான பிரசாரங்களில், கேரள அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.முல்லை பெரியாறு அணைக்கு வரும் தண்ணீர் வரத்தை தடுக்கும் வகையில்,அருகில் புதிதாக மற்றொரு அணையை கட்டுவதற்கான முயற்சி யிலும், கேரள அரசு ஈடுபட்டு வருகிறது.

ஒப்புதல்

புதிய அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி யைப் பெறுவதற்கு முன், அந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டும்.இந்த ஒப்புதலை பெறுவதற்கு முன், திட்டத்தின் சாத்தியக் கூறுகள், சுற்றுச்சூழல் நிலை குறித்த ஆய்வு நடத்த வேண்டும். இந்த ஆய்வு நடத்துவதற்கு அனுமதி கோரி, கேரளா சார்பில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத் தின் நிபுணர் ஆய்வுக் குழுவிடம் மனு அளிக்கப் பட்டது.

சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை காரணம் காட்டி, ‘புதிய அணை அமைக்கப்பட வேண்டும்’ என, கேரள அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த ஆய்வு மேற்கொள்வதற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்கத்தின் துணை அமைப்பு ஒப்புதல் அளித்து உள்ளது, தமிழக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.’இந்த ஆய்வுக்கான அனுமதியை நிறுத்த வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

வலுவாக உள்ளது

இந்தப் பிரச்னை தொடர்பாக, தமிழக அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கேரளாவின் இடுக்கியில் உள்ள, 123 ஆண்டுகள் பழமையான முல்லை பெரியாறு அணை மிகவும் வலுவானதாக உள்ளதாகவும், 142 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்க லாம் என்றும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. இந்நிலையில், புதிய அணை கட்டும் வகையில், அதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த, கேரளாவுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த முடிவானது, உச்ச நீதிமன்றம், 2014ல் அளித்த தீர்ப்புக்கு எதிரானது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமருக்கு முதல்வர் கடிதம்

முல்லை பெரியாறு பிரச்னை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு,முதல்வர் பழனிசாமி, நேற்று கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

மத்திய சுற்றுச்சூழல் துறையின் கீழ் செயல்படும், நதித் திட்டங்களுக்கான ஆய்வுக் கமிட்டி, கடந்த மாதம், 27ம் தேதி கூடியது. இக்கூட்டத்தில், தற்போதைய முல்லை பெரியாறு அணைக்கு
பதிலாக, புதிய அணை கட்ட, சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த, கேரளா அனுமதி கோரியது. ஆய்வு நடத்துவதற்கான விரிவான விதிகளை, சுற்றுச்சூழல் அமைச்ச கத்தின் ஆய்வு கமிட்டி வழங்க, முடிவு செய்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறையின் இந்த நடவடிக்கை, தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த கவலை மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறையின் முடிவு, 2006 மற்றும் 2014 மே, 7ல், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிரானது.’புதிய அணை கட்டுவது தொடர்பான பிரச்னையில், தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் இடையே, கருத்து ஒற்றுமை அவசியம்.

கேரளாவின் திட்டத்தை, தமிழகம் மீது திணிக்கக் கூடாது’ என, நீதிமன்றம் தன் உத்தரவில் தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக, மத்திய சுற்றுச்சூழல் துறையின் முடிவு அமைந்துள்ளது. கடந்த, 2015 ஜூன், 10ம் தேதி, அன்றைய முதல்வர், ஜெ., உங்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘புதிய அணை தொடர்பான, கேரள அரசின் விண்ணப்பங்களை, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் ஏற்கக் கூடாது; இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது’ என உத்தர விடும்படி வலியுறுத்தினார். அதை தொடர்ந்து, கேரள அரசின் கோரிக்கையை, 2015 ஜூலையில், மத்திய அரசு நிராகரித்தது.

தற்போது, உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, முல்லை பெரியாறு அணை அருகே, புதிய அணை கட்ட அளித்துள்ள, அனுமதியை திரும்பப் பெற, வனத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

தைராய்டு.

தைராய்டு கோளாரால் அவதி படுபவர்கள் சௌசௌவை பயன்படுத்தலாம். சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு, தைராய்டு நோயால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இதை உணவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு கோளாறு நீங்கும்.

சுண்டைக்காய் வற்றல் , சீரகம் , சோம்பு இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை , மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தைராய்டு கோளாறுகள் குணமாகும்.

இரவு படுக்கப்போகும் முன்

அமுக்கரா கிழங்கு,
பனங்கற்கண்டு,
பால்.

ஒரு ஸ்பூன் அமுக்கரா கிழங்கு பொடியுடன் சிறிது பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து இரவு தூங்க போகும் முன்பு எடுத்து கொண்டு வரவும்.

மேற்கூறிய முறைகளை தொடர்ந்து செய்து 48 நாட்கள் கழித்து பரிசோதனை செய்து முன்னேற்றத்தை தெரியப்படுத்தவும்.

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

தகவல் – கிராமத்தான் முயாஷா.

தொடையின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் உண்டாகும் வலியிலிருந்து விடுபட( sciatica).

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை
காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…

உணவை மருந்தாக்கு
மருந்தை உணவாக்காதே…

தலைப்பு :
தொடையின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் உண்டாகும் வலியிலிருந்து விடுபட( sciatica).

—————————-

சத்துக்கள்
——————–
விட்டமின் B2 , C , B6 , தையமின் , நியசின் , மெக்னீசியம் , பாஸ்பரஸ் , காப்பர் , பொட்டாசியம் , மங்கனீசு , கால்சியம் , இரும்புச் சத்து , போலிக் ஆசிட் , நார்ச் சத்து

தீர்வு
———————————
ஒரு இளம் பிஞ்சு கத்தரிக்காயை
(வரியுள்ள , விதையுள்ள காய்) எடுத்துக்கொண்டு ஒரு 10 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறப்போட்டு பின்பு எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் முற்றின முருங்கை விதை (5) , ஒரு எலுமிச்சம்பழத்தின் தோலை நறுக்கி போட்டு அதனுடன் தக்காளி(1), மிளகு(2) , கொஞ்சம் மஞ்சள் தூள் , தேவையெனில் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி காலை மாலை என இருவேளையும் குடித்து வரவும்.

திப்பிலி (150 கிராம்), இஞ்சி(150 கிராம்) இரண்டையும் நன்றாக சிதைத்து அரை லிட்டர் கடுகு எண்ணெயில் போட்டு நீர் சுண்டும் வரை நன்கு காய்ச்சி வைத்துக்கொண்டு தொடையின் வெளிபுறம் பூசி வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்

—————————————————-
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
————————-
—————
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-

(https://www.facebook.com/keezhmandur/)
புதன் 24 அக்டோபர் 2018

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

தொண்டை வலி

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
தொண்டை வலி

————————————–
சத்துக்கள்
——————–
விட்டமின் B , C , கால்சியம் , பொட்டாசியம் , இரும்புச் சத்து , பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து

தீர்வு
————————————————-
வெண்பூசணிக்காய் (250 கிராம் தோல் , விதையுடன் ) , எலுமிச்சம் பழம்
(1 தோலோடு) , புதினா (சிறிதளவு) அதனுடன் வெற்றிலை (2) , கொத்தமல்லி , மிளகு (2) ,தக்காளி சிறியது (1) இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் அல்லது மோர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு காலையில் இருந்து மதியம் வரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும். தீர்ந்தவுடன் மறுபடியும் ஜூஸாக்கி குடிக்கலாம் தொடர்ந்து குறைந்தபட்சம் 21 நாட்களாகவது குடித்து வரவும்.

(தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவும்.)

மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————–
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,_

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-

(https://www.facebook.com/keezhmandur/)
செவ்வாய் 23 அக்டோபர் 2018

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பது மற்றும் சிறுநீர் முற்றிலும் வெளியேற முடியாமல் தங்கி விடுதல் குறைபாடு நீங்க..

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பது மற்றும் சிறுநீர் முற்றிலும் வெளியேற முடியாமல் தங்கி விடுதல் குறைபாடு நீங்க
—————————————

சத்துக்கள்
——————–
சோடியம் ,கார்போஹைட்ரேட் நார்ச்சத்து ,சர்க்கரை , புரதம் வைட்டமின் (ஏ, பி6 , சி , இ , கே )

தீர்வு
———————————–
வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு(100 கிராம்) அதனுடன் பீர்க்கங்காய் (150 கிராம் தோலுடன்) , முருங்கை விதை (10) இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

வாழைக்காய் மற்றும் வாழைப் பூவை தேவையான அளவு எடுத்து நீராவியில் வேகவைத்து பொறியல் செய்து மதிய வேளை உணவில் அதிகமாக வைத்து சாப்பிட்டு வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
————————————————–
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-

எங்களின் புதிய படைப்பு…

முகப்பு

(https://www.facebook.com/keezhmandur/)
திங்கள் 22 அக்டோபர் 2018

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg

தகவல் – கிராமத்தான் முயாஷா.

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்