ஞாயிறு. மே 26th, 2019

- மு.ஷாஜஹான்.

ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற மயிலாடுதுறை மண்ணின் மைந்தன் விசுவநாதன் ஆனந்த்…!

இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் எனப் புகழப்படும் விசுவநாதன் ஆனந்த் அவர்கள், 1969 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள், நமது மயிலாடுதுறை மண்ணில் விஸ்வநாதன் அய்யர், சுசீலா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை விஸ்வநாதன் தென்னக ரயில்வேயில், பொது மேலாளராகப் பணியாற்றி வந்தார். விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் பதினாறு வயதிலேயே, அதிவேகமாக சதுரங்கக் காய்களை நகர்த்தி மின்னல் சிறுவன் என்று போற்றப்பட்டவர். மேலும், 2003 ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன் போட்டியில் வெற்றிப்பெற்று, உலகின் அதிவேக சதுரங்க வீரர் என்ற சிறப்பு பட்டமும் பெற்றார். பதினான்கு வயதில், இந்திய சதுரங்க சாம்பியன் பட்டம், பதினைந்து வயதில் அனைத்துலக மாஸ்டர் அந்தஸ்து, பதினெட்டு வயதில் உலக சதுரங்க ஜூனியர் சாம்பியன் பட்டம், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் என வென்று சதுரங்க விளையாட்டின் வரலாற்றில், இந்தியாவின் பெருமையை இமயம் தொடச் செய்தார். இதுவரைக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வென்றுள்ள விஸ்வநாதன் அவர்களுக்கு, இந்திய அரசின் உயரிய விருதுகளும், சர்வதேச விருதுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். உலகளவில் சதுரங்கப் விளையாட்டில் இன்று வரை முடிசூடா மன்னனாக திகழ்ந்து, மயிலாடுதுறை மண்ணிற்கு பெருமை சேர்த்து வரும் விசுவநாதன் ஆனந்த் அவர்கள் பெற்ற விருதுகளும், மரியாதைகளும்

1985 – அர்ஜுனா விருது.
1987 – இந்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது.
1987 ஆம் ஆண்டிற்கான, தேசிய குடிமகன் மற்றும் சோவியத் லேண்ட் நேரு விருது.
1991 மற்றும் 1992 ஆம் ஆண்டுக்கான, ராஜீவ்காந்தி கோல் ரத்னா விருது.
1998 – பிரித்தானிய சதுரங்கக் கூட்டமைப்பின், புக் ஆஃப் தி இயர் விருது.
2000 – மத்திய அரசால் பத்ம பூஷன் விருது.
1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான, சதுரங்க ஆஸ்கார் விருது.
2007 – இந்திய அரசால் பத்ம விபூஷன் விருது.

தன்னுடைய பதினான்கு வயதிலேயெ சதுரங்க விளையாட்டில் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி, வெறும் இருபது ஆண்டுகளுக்குள்ளேயே ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தினை வென்று, சதுரங்க விளையாட்டு உலகில் முடிசூடா மன்னனாக விளங்கும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், சதுரங்கப் விளையாட்டில் ரஷ்யர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த சாதனைகளை மாற்றி, ஒட்டுமொத்த சதுரங்க வரலாற்றில் இந்தியாவின் புகழை நிலைநிறுத்தி உள்ளார் நம்ம மயிலாடுதுறை மண்ணின் மைந்தன்.

நன்றி :http://mayiladuthurainews.com/may_news/viswanathan_anand/
தகவல் – கிராமத்தான் முயாஷா.

ரயில் விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு அளிப்பது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், தீர்ப்பாய நீதிபதி, ஆர்.கே.மிட்டலை, ‘சஸ்பெண்ட்’ …!

ரயில் விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு அளிப்பது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், தீர்ப்பாய நீதிபதி, ஆர்.கே.மிட்டலை, ‘சஸ்பெண்ட்’ …!

ரயில் விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு அளிப்பது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், தீர்ப்பாய நீதிபதி, ஆர்.கே.மிட்டலை, ‘சஸ்பெண்ட்’ செய்ய, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் அனுமதி அளித்துள்ளார். இழப்பீடு வழங்குவதில், 50 கோடி ரூபாய் முறைகேடு செய்ததால், அவருக்கு எதிராக, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.ரயில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் அல்லது காயம் அடைவோர் தொடர்பான வழக்குகளை, ஆர்.சி.டி., எனப்படும், ரயில்வே தீர்ப்பாயம் விசாரித்து, இழப்பீடுகளை அளித்து வருகிறது.

அம்பலம்

இந்த தீர்ப்பாயத்தின் நீதிபதியான, ஆர்.கே.மிட்டல், இந்தாண்டு துவக்கத்தில், ஜார்க்கண்ட் மாநில
தீர்ப்பாயத்தில் பணியாற்றினார். அப்போது, குறிப்பிட்ட சில வழக்கறிஞர்களுடன் கூட்டு சேர்ந்து,
இழப்பீடுகளை முறைகேடாக அளித்து வந்ததாக புகார் எழுந்தது.இது தொடர்பாக, ரயில்வே துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில், 50 கோடி ரூபாய் மதிப்பில் ஊழல் நடந்துள்ளது அம்பலம் ஆனது.
விபத்துகளில் இறந்ததாக, போலியாக சித்தரிக்கப்பட்ட நபர்களின் பெயர்களில், நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டு வந்து உள்ளன.பல சந்தர்ப்பங்களில், ஒரே விபத்து சம்பவம், மீண்டும் பல முறை குறிப்பிடப்பட்டிருந்ததும், ஏற்கனவே நஷ்ட ஈடு வழங்கப்பட்ட நபர்களின் பெயர்களில், மீண்டும் பல முறை நஷ்ட ஈடு வழங்கப்பட்டதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.போலி வழக்குகளில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கும், பெருந்தொகை சென்று உள்ளது கண்டுபிடிக்க பட்டு உள்ளது.

முதல் முறை

இந்த விவகாரம் தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதி, யு.யு.லலித், தற்போது விசாரித்து வருகிறார். இந்நிலையில், நீதிபதி,ஆர்.கே.மிட்டலை, ‘சஸ்பெண்ட்’ செய்வதற்கான ஒப்புதலை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் அளித்து உள்ளதாக, உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஊழல் விவகாரம் தொடர்பாக, ரயில்வே தீர்ப்பாய நீதிபதி, ‘சஸ்பெண்ட்’

செய்யப்படுவது, இதுவே முதல்முறை.

கடந்து வந்த பாதை!

ஆர்.சி.டி., எனப்படும், ரயில்வே தீர்ப்பாயத்தின் தலைவர், கே.கண்ணன், நீதிபதி மிட்டலின் முறைகேடுகள் குறித்து, சில மாதங்களுக்கு முன், ரயில்வே வாரியத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், மிட்டலை சஸ்பெண்ட் செய்யும்படி கூறியிருந்தார்.அதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இருந்து, கேரள மாநிலம், திருவனந்தபுரத்திற்கு, மிட்டல் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் இன்றி, தீர்ப்பாயத்தின் தற்போதைய நீதிபதியை, சஸ்பெண்ட் செய்ய முடியாது’ என, ரயில்வே வாரியம் கருதியது. எனவே, மிட்டல் சம்பந்தப்பட்ட கோப்பு, தலைமை நீதிபதியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, மிட்டலை சஸ்பெண்ட் செய்ய, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், தற்போது
ஒப்புதல் அளித்துள்ளார்.
பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2018 22.00
தகவல் – கிராமத்தான் முயாஷா.

அடிக்கடி சிறுநீர் கழித்தல் குறைபாடு நீங்க…!

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————-
<em>அடிக்கடி சிறுநீர் கழித்தல் குறைபாடு நீங்க-
————————————————-
சத்துக்கள்
—————
—–
வைட்டமின்கள் (ஏ, பி, சி, ஈ மற்றும் கே), கனிமங்கள், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ளது. மேலும் சவ்வு போன்ற நார்ச்சத்தும் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.

தீர்வு
———————————–
நன்கு இளம் பிஞ்சு வெண்டைக்காயை எடுத்து ஒரு 10 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறப்போட்டு அதன்மேலே உள்ள ரோமம்போன்ற பகுதியை நன்றாக துடைத்து காலை மதியம் இரவு என மூன்று வேளையும் தலா மூன்று வெண்டைக்காய் வீதம் பச்சையாக சாப்பிட்டு வரவும் .

மதியம் வேளை உணவில் வெண்டைக்காயை நீராவியில் வேகவைத்து அதனுடன் சீரகம் கொஞ்சம் அதிகம் சேர்த்து பொறியல் செய்து சாப்பிட்டு வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
————————————————-
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-

(https://www.facebook.com/keezhmandur/)
சனி 20 அக்டோபர் 2018

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg

தகவல் – கிராமத்தான் முயாஷா.

பஞ்சாப் – ரயில் விபத்தில் 50 பேர் பலி…!

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில், தசரா பண்டிகையையொட்டி, ராவணன் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சியை காண, ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், அவர்கள் மீது, அசுர வேகத்தில் வந்த ரயில் மோதி, 50 பேர் பலியாகினர்.

பஞ்சாபில், காங்.,கை சேர்ந்த, அமரீந்தர் சிங் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில், ஜோடா படாக் பகுதியில், ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதியில் உள்ள இடத்தில், தசரா பண்டிகை கொண்டாட்டம் இரவு நடந்தது.இதில், ராவணன் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. உற்சாகத்தில் இருந்த மக்கள், பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
மக்கள் வெள்ளத்தால், அந்த பகுதி நிரம்பி வழிந்ததால், அவர்களில் ஒரு பகுதியினர், தண்டவாளங்களில் நின்றிருந்தனர்.

அப்போது, தண்டவாளத்தில் உள்ளூர் ரயில், எச்சரிக்கை ஒலியை எழுப்பியபடி, அசுர வேகத்தில் வந்தது. பட்டாசுகள் வெடித்ததால், ரயிலின் எச்சரிக்கை ஒலி, அவர்களுக்கு கேட்கவில்லை.

சில நொடிகளில், அந்த பகுதியை கடந்த, அந்த ரயில், தண்டவாளம் மீது நின்றிருந்தோரை நசுக்கி தள்ளியபடி சென்றது. இந்த துயர சம்பவத்தில், 60 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.தசரா பண்டிகையின்போது நடந்த இந்த சோக சம்பவம், நாடு முழுவதும் மக்களிடையே, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

விபத்து நடந்த பகுதியில், தசரா பண்டிகை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, காங்கிரசார் செய்திருந்தனர். சிறப்பு விருந்தினராக, காங்.,கை சேர்ந்த, பஞ்சாப் சுற்றுலாத் துறை அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான, நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி, நவ்ஜோத் கவுர் அழைக்கப்பட்டிருந்தார்.

பிரதமர் மோடி, ராஜ்நாத் ஆகியோர் இரங்கல்

ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பலியானவர்களின் குடும்பத்தினருக்க தலா ரூ. 5லட்சம் இழப்பீடு வழங்ககப்படும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. மேலும் பஞ்சாப் முதல்வர் அமிரீந்தர்சிங் அமிர்தசரஸ் சென்று சம்பவ இடத்தை பார்வையிடுகிறார். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

தலைவர்கள் இரங்கல்

ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல், மே.வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவு

பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பஞ்சாப் ரயில் விபத்தில் பலியானவர்கள் குறித்த செய்தி இதயத்தை உருக்குகிறது என குறிப்பிட்டுள்ளார்.மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


தகவல் – கிராமத்தான் முயாஷா.
பதிவு செய்த நாள்: வெள்ளி, அக் 19, 2018 22:26

சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல- மராத்தியர்களே.

சாம்பாரை முதன் முதலில் தயாரித்தது, மராத்தியர்கள் தான்,” என, பிரபல சமையல் கலை நிபுணர், குணால் கபூர்கூறியுள்ளார்.

சாம்பார் என்ற வார்த்தையைக் கேட்டாலே, தென் மாநிலங்களில் உள்ள பலருக்கு, நாக்கில் எச்சில் ஊறும். தமிழகத்தில் விருந்து என்றால், அதில் சாம்பாருக்கு நிச்சயம் இடம் உண்டு.வெங்காயம், முருங்கை, கத்தரி என, பல காய்கறிகளை பயன்படுத்தி, சாம்பார் வைக்கப்படுகிறது. சாம்பாரை முதலில் தயாரித்தது, தமிழர்கள் தான் என, பலரும் நினைக்கிறோம்.

இந்நிலையில், டில்லி யைச் சேர்ந்த குணால் கபூர், தனியார், ‘டிவி’ சேனல் ஒன்றில், சமையல் கலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். உலக உணவு தினத்தை முன்னிட்டு, சமையல் கலை நிகழ்ச்சியில், சாம்பார் பற்றி அவர் கூறியதாவது:

தென் மாநில உணவில், சாம்பார் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அதனால், சாம்பாரை தென் மாநில உணவு என, பலரும் கருதுகிறோம்.உண்மையில், முதன் முதலில், சாம்பார் வைத்தது, மராத்தியர்கள் தான். சத்ரபதி சிவாஜியின் மகன், சாம்பாஜி, மஹாராஷ்டிராவை ஆட்சி செய்த போது தான், சாம்பார் முதலில் தயாரிக்கப்பட்டுள்ளது.மன்னரை நினைவுபடுத்தும் வகையில், அதற்கு சாம்பார் என, பெயர் வைத்தனர். எனினும், இதற்கு, எழுத்து பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை.

இப்போது, துவரம் பருப்பை பயன்படுத்தி, சாம்பார் வைக்கப்படுகிறது. அப்போது, உளுந்தம் பருப்பை பயன்படுத்தி, சாம்பார் வைத்தனர்.மராத்தியர்களுக்கு, போர்ச்சுகீசியர்கள் தான், மிளகாயை அறிமுகப்படுத்தினர். அதன் பின், நாடு முழுவதும் மிளகாயை, மராத்தியர்கள் பிரபலப்படுத்தினர். இப்போது, சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக, மிளகாய் மாறியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் – கிராமத்தான் முயாஷா.

பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி…!

பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி…!

கல்வி, செல்வம், வீரம் ஆகிய செல்வங்களுக்கு சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என மூன்று தேவியரை வணங்குவது மரபு. 
கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என, கல்விக்கு கூட உலகத்தின் அளவை, ஒரு வரையறையாக வைத்து விட்டனர். 
வீரம் என்பதும் அப்படியே. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று அதற்கும் எல்லை வகுத்து விட்டனர். 
ஆனால், எவ்வளவு இருந்தாலும், ‘போதாது’ என்ற சொல்ல வைக்கும் ஓர் அதிசயப் பொருள் உலகில் ஒன்று இருக்கிறதா என்றால், நிச்சயமாக இருக்கிறது. அது தான் பணம். 
பணத்தை தேடி அலையாதவர்கள் இல்லை. துறவிகளுக்கு கூட திருப்பணிகளும், யாகங்களும் செய்ய பணம் தேவைப்படுகிறது. நவராத்திரி மட்டுமல்ல… எந்த விழாவானாலும், பணத்தின் நாயகியான மகாலட்சுமியை நினைக்காதவர்கள் இருக்க முடியாது. ஆக, பணம் எல்லாருக்கும் பிடிக்கும். அந்த பணத்தின் நாயகியான லட்சுமிக்கு, தமிழகத்தில் ஓர் ஊர் ரொம்பப் பிடிக்கும். அது தான் திருத்தங்கல். 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள இந்த ஊரில், நின்ற நாராயண பெருமாள் கோவில் இருக்கிறது. இங்கு, செங்கமல தாயார் என்ற பெயரில் அருள்பாலிக்கிறாள், மகாலட்சுமி. விஜயதசமியன்று இவளை வழிபட்டால், செல்வ வளம் பெருகும்.
திருமால், பாற்கடலில் சயனித்திருந்த போது, ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூவருக்குள் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற பிரச்னை ஏற்பட்டது. 

 

மகாலட்சுமியான ஸ்ரீதேவியின் தோழியர், ‘மற்றவர்களைக் காட்டிலும் ஸ்ரீதேவியே உயர்ந்தவள்; அவளே அதிர்ஷ்ட தேவதை. மகாலட்சுமி என்ற பெயரே மிக உயர்ந்தது. வேதங்கள் இவளை, ‘திருமகள்’ என்று போற்றுகின்றன. பெருமாளுக்கு இவளிடம் தான் பிரியம் அதிகம். இவளது பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு, ஸ்ரீனிவாசன், ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் (ஸ்ரீ என்றால் லட்சுமி) என்ற திருநாமங்கள் சூட்டப்பட்டுள்ளன…’ என்று புகழ்ந்தனர்.
பூமாதேவியின் தோழியரோ, ‘உலகிற்கு ஆதாரமான பூமாதேவியே பொறுமை மிக்கவள். இவள் மீது துப்புகின்றனர், மலம் கழிக்கின்றனர், மாசுபடுத்துகின்றனர், நெருப்பிடுகின்றனர். ஆனால், எல்லாவற்றையும் தாங்கி பொறுமை காக்கிறாள். இவளைக் காக்க, பெருமாள் வராகம் என்ற ஒரு அவதாரத்தையே எடுத்தார்…’ என்றனர்.
நீளாதேவியின் தோழியர், ‘தண்ணீர் தேவதையாக விளங்குபவள், நீளாதேவி. தண்ணீருக்காக இந்த உலகம் படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. நீரில்லாவிட்டால் இந்த உலகம் இல்லை. தண்ணீரை, ‘நாரம்’ என்பர். இவளது பெயரால் தான் பெருமாளுக்கு, ‘நாராயணன்’ என்ற சிறப்பு திருநாமம் ஏற்பட்டது. உலகில், ‘நாராயணா’ என்று உச்சரிப்பவர்களே அதிகம்…’ என்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ஸ்ரீதேவி, வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு, தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க, பூலோகத்திலுள்ள தங்கால மலைக்கு வந்து தவம் புரிந்தாள். பெருமாள், அவளுக்கு காட்சி அளித்து, ‘ஸ்ரீதேவியே சிறந்தவள்’ என, ஏற்று அருளினார். 
திருமகள் தங்கிய இந்த மலை, நாளடைவில், ‘திருத்தங்கல்’ என பெயர் பெற்றது. ‘திரு’ என்றால் லட்சுமி.
கோவில், தங்கால மலை மீது உள்ளது. பெருமாள், நின்ற கோலத்தில் காட்சி தருவதால், ‘நின்ற நாராயணப் பெருமாள்’ என, அழைக்கப்படுகிறார். செங்கமல தாயார் தனி சன்னிதியில் இருக்கிறாள். அதிர்ஷ்ட தேவதையான இவளுக்கு, கமல மகாலட்சுமி என்ற பெயரும் உண்டு. அருணன், மார்க்கண்டேயர், பிருகு முனிவர் ஆகியோர் கருவறையில் உள்ளனர். 
சுமார், 1,300 ஆண்டு பழமையான கோவில் இது. மூலஸ்தானத்தில் அன்ன நாயகி (ஸ்ரீதேவி), அம்ருத நாயகி (பூமாதேவி), அனந்த நாயகி (நீளாதேவி), ஜாம்பவதி என்ற நான்கு தாயார்கள் உள்ளனர். நான்கு தாயார்களுடன் பெருமாளைத் தரிசிப்பது அபூர்வம்.
விருதுநகர் – சிவகாசி சாலையில், 20 கி.மீ., துாரத்தில் இவ்வூர் உள்ளது. 

நன்றி – திரு தி.செல்லப்பா.

தகவல் – கிராமத்தான் முயாஷா

பதிவு செய்த நாள்:

செவ்வாய் 16 அக்டோபர் 2018.

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
சிறுநீரில் துகள்களாக (MINARAL SALTS) வெளியேறுவதை கட்டுப்படுத்த
—————————————

சத்துக்கள்
——————–
எலுமிச்சை பழத்தின் தோலில் விட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

தீர்வு
———————————–
எலுமிச்சம் பழம் தோலுடன் (சிறியது1) , கத்தரிக்காய் (ஒரு காய் வரியுள்ள , விதையுள்ளவற்றை சிறிது நேரம் வெந்நீரில் ஊறப்போட்டு எடுக்கவும்) , பீர்க்கங்காய் (100 கிராம்) , கொத்தமல்லித் தழை (சிறிதளவு), இஞ்சி (1 துண்டு) , இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் நிறைய ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உமிழ் நீருடன் கலந்து மெதுவாக குடித்து வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
————————————————-
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.

Cell : 96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-

(https://www.facebook.com/keezhmandur/)
செவ்வாய் 16 அக்டோபர் 2018

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg

இரத்தம் சீழ் மற்றும் சளியுடன் சிறுநீர் வெளியேறுவதை கட்டுப்படுத்த.

–இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
———–
இரத்தம் , சீழ் மற்றும் சளியுடன் சிறுநீர் வெளியேறுவதை கட்டுப்படுத்த
—————————————

சத்துக்கள்
——————–
புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை `பி’ காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் இருக்கின்றன .

தீர்வு
——————————–
தேங்காய் (200 கிராம் ) , கொத்தவரங்காய் (5) , பீர்க்கங்காய் (100 கிராம் தோலுடன்) இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அதனுடன் தண்ணீர் நிறைய சேர்த்து அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சம் குடித்து வரவும்.

தினமும் இருவேளை தேங்காய் பால் தலா (100 மி.லி) அல்லது கொப்பரைத் தேங்காய் எவ்வளவு சாப்பிடமுடியுமோ சாப்பிட்டு வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————-
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-

(https://www.facebook.com/keezhmandur/)
திஙகள் 15 அக்டோபர் 2018

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg.

தகவல் – கிராமத்தான் முயாஷா.

சீர்காழி அருகே அரசியல்வாதிகளுக்கு கிராம மக்கள் தடை…

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த தொடுவாய் கிராம மீனவர் கவியரசன். இவர், கடந்த 10ம் தேதி மீன்பிடிக்கும் போது கடலில் தவறி விழுந்து மாயமானார். கடந்த ஐந்து நாட்களாக சக மீனவர்கள் அவரை தேடிவந்த நிலையில் இதுவரை அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் உறவினர்களும், கிராம மக்களும் சோகத்தில் உள்ளனர். மீனவர் கவியரசனை தேடவும் அல்லது ஆறுதல் கூறவும் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி அரசு அதிகாரிகளும் முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆளும் அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி கொடிகளையும் இறக்கிவிட்டு கொடி மர மேடைகளை வெள்ளை துணியால் மூடினர். மேலும் அரசியல் கட்சியினரோ, அரசியல்வாதிகளோ தொடுவாய் கிராமத்தில் நுழையவும் தடைவிதித்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல் – கிராமத்தான் முயாஷா.

  • பதிவு செய்த நாள் :
  • ஞாயிறு 14 அக்டோபர் 2018

இயற்கை விவசாயம்: சிக்கிமிற்கு ஐ.நா., விருது…!

இந்தியாவில், இயற்கை விவசாயத்திற்கு முற்றிலும் மாறிய

-சிக்கிம் மாநிலத்திற்கு-

ஐ. நா., சபை விருது அளித்துள்ளது. 

            வேதி பொருள் மற்றும் உரத்தில் இருந்து விடுபட்டு முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாறிய மாநிலம் என சிக்கிம் கடந்த 2016ல் அறிவிக்கப்பட்டது. சிக்கிம், விவசாய கொள்கைகள் மூலம் 66 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இதனால், சுற்றுலாவும் அதிகரித்து உள்ளது.  
             கடந்த ஆண்டுகளில், பாலைவனமாக்கல், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக வன்முறை, அணு ஆயுதங்கள், கடல் மாசுபாடு ஆகியவற்றிற்கு எதிரான கொள்கைகளுக்கு ஐ.நா., வழங்கி வந்த விருது, இந்த ஆண்டு, இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயம், மரம் நடுதல், மண்ணை பாதுகாக்கும் வகையில் பயிர்கள், வேதியியல் உரம் பயன்படுத்துவதை தவிர்ப்பது ஆகியவற்றிற்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த வகையில், இயற்கை வேளாண்மைக்கு முற்றிலும் மாறிய சிக்கிமிற்கு விருது வழங்கப்பட்டு உள்ளது.

              கடந்த 2014 முதல் 2017 ல் சிக்கிமில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து உள்ளது. சுற்றுச்சூழல் இயலை பாதுகாக்கப்பதில் சிக்கிம் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளதாக ஐ.நா., அதிகாரி கூறியுள்ளார். 
பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவுக்கான பொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கியதற்காகவும், இயற்கை உரம் குறித்து மக்களிடம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும் டென் மார்க் நாட்டிற்கும் ஐ.நா., விருது அளிக்கப்பட்டு உள்ளது.

                                                                    (மேலும்…)

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்