ஞாயிறு. செப் 22nd, 2019

- மு.ஷாஜஹான்.

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
சிறுநீரில் துகள்களாக (MINARAL SALTS) வெளியேறுவதை கட்டுப்படுத்த
—————————————

சத்துக்கள்
——————–
எலுமிச்சை பழத்தின் தோலில் விட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

தீர்வு
———————————–
எலுமிச்சம் பழம் தோலுடன் (சிறியது1) , கத்தரிக்காய் (ஒரு காய் வரியுள்ள , விதையுள்ளவற்றை சிறிது நேரம் வெந்நீரில் ஊறப்போட்டு எடுக்கவும்) , பீர்க்கங்காய் (100 கிராம்) , கொத்தமல்லித் தழை (சிறிதளவு), இஞ்சி (1 துண்டு) , இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் நிறைய ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உமிழ் நீருடன் கலந்து மெதுவாக குடித்து வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
————————————————-
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.

Cell : 96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-

(https://www.facebook.com/keezhmandur/)
செவ்வாய் 16 அக்டோபர் 2018

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg

இரத்தம் சீழ் மற்றும் சளியுடன் சிறுநீர் வெளியேறுவதை கட்டுப்படுத்த.

–இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
———–
இரத்தம் , சீழ் மற்றும் சளியுடன் சிறுநீர் வெளியேறுவதை கட்டுப்படுத்த
—————————————

சத்துக்கள்
——————–
புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை `பி’ காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் இருக்கின்றன .

தீர்வு
——————————–
தேங்காய் (200 கிராம் ) , கொத்தவரங்காய் (5) , பீர்க்கங்காய் (100 கிராம் தோலுடன்) இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அதனுடன் தண்ணீர் நிறைய சேர்த்து அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சம் குடித்து வரவும்.

தினமும் இருவேளை தேங்காய் பால் தலா (100 மி.லி) அல்லது கொப்பரைத் தேங்காய் எவ்வளவு சாப்பிடமுடியுமோ சாப்பிட்டு வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————-
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-

(https://www.facebook.com/keezhmandur/)
திஙகள் 15 அக்டோபர் 2018

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg.

தகவல் – கிராமத்தான் முயாஷா.

சீர்காழி அருகே அரசியல்வாதிகளுக்கு கிராம மக்கள் தடை…

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த தொடுவாய் கிராம மீனவர் கவியரசன். இவர், கடந்த 10ம் தேதி மீன்பிடிக்கும் போது கடலில் தவறி விழுந்து மாயமானார். கடந்த ஐந்து நாட்களாக சக மீனவர்கள் அவரை தேடிவந்த நிலையில் இதுவரை அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் உறவினர்களும், கிராம மக்களும் சோகத்தில் உள்ளனர். மீனவர் கவியரசனை தேடவும் அல்லது ஆறுதல் கூறவும் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி அரசு அதிகாரிகளும் முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆளும் அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி கொடிகளையும் இறக்கிவிட்டு கொடி மர மேடைகளை வெள்ளை துணியால் மூடினர். மேலும் அரசியல் கட்சியினரோ, அரசியல்வாதிகளோ தொடுவாய் கிராமத்தில் நுழையவும் தடைவிதித்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல் – கிராமத்தான் முயாஷா.

  • பதிவு செய்த நாள் :
  • ஞாயிறு 14 அக்டோபர் 2018

இயற்கை விவசாயம்: சிக்கிமிற்கு ஐ.நா., விருது…!

இந்தியாவில், இயற்கை விவசாயத்திற்கு முற்றிலும் மாறிய

-சிக்கிம் மாநிலத்திற்கு-

ஐ. நா., சபை விருது அளித்துள்ளது. 

            வேதி பொருள் மற்றும் உரத்தில் இருந்து விடுபட்டு முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாறிய மாநிலம் என சிக்கிம் கடந்த 2016ல் அறிவிக்கப்பட்டது. சிக்கிம், விவசாய கொள்கைகள் மூலம் 66 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இதனால், சுற்றுலாவும் அதிகரித்து உள்ளது.  
             கடந்த ஆண்டுகளில், பாலைவனமாக்கல், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக வன்முறை, அணு ஆயுதங்கள், கடல் மாசுபாடு ஆகியவற்றிற்கு எதிரான கொள்கைகளுக்கு ஐ.நா., வழங்கி வந்த விருது, இந்த ஆண்டு, இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயம், மரம் நடுதல், மண்ணை பாதுகாக்கும் வகையில் பயிர்கள், வேதியியல் உரம் பயன்படுத்துவதை தவிர்ப்பது ஆகியவற்றிற்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த வகையில், இயற்கை வேளாண்மைக்கு முற்றிலும் மாறிய சிக்கிமிற்கு விருது வழங்கப்பட்டு உள்ளது.

              கடந்த 2014 முதல் 2017 ல் சிக்கிமில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து உள்ளது. சுற்றுச்சூழல் இயலை பாதுகாக்கப்பதில் சிக்கிம் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளதாக ஐ.நா., அதிகாரி கூறியுள்ளார். 
பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவுக்கான பொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கியதற்காகவும், இயற்கை உரம் குறித்து மக்களிடம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும் டென் மார்க் நாட்டிற்கும் ஐ.நா., விருது அளிக்கப்பட்டு உள்ளது.

                                                                    (மேலும்…)

நீதிபதியின் மனைவி, மகனை சரமாரியாக சுட்ட பாதுகாவலர்.

குர்கானில் கூட்ட நெரிசல் மிகுந்த மார்க்கெட் பகுதியில் நீதிபதியின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் நீதிபதியின் பாதுகாவலரால் சரமாரியாக சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலம், குர்கானில் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் கிருஷண் கந்த். இவரது மனைவி ரித்து மற்றும் 17 வயது மகன் துருவ் ஆகியோர் பாதுகாவலர் மகிபால் (32)உடன் காரில் நேற்று(அக்.13) மதியம் 3 மணியளவில் மார்க்கெட்டிற்கு சென்றனர். 3.30 மணியளவில் வேலைகளை முடித்து விட்டு திரும்பிய ரித்து மற்றும் துருவ், வீட்டிற்கு செல்வதற்காக காரின் அருகே சென்றனர். அப்போது காரில் இருந்து இறங்கிய பாதுகாவலர் மகிபால், ரித்துவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சிறிது நேரத்தில் தன்னிடம் இருந்த கைதுப்பாக்கியால் ரித்துவை மார்பிலும், வயிற்றிலும் சரமாரியாக சுட்டார். அதை தடுக்க முயன்ற துருவையும் தோள்பட்டை, தலை என 3 முறை சுட்டார். இதில் துருவ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். மயங்கிய நிலையில் கிடந்த ரித்துவை, மகிபால் காலால் பலமுறை மிதித்து தாக்கிவிட்டு, காருடன் தப்பிச் சென்றார்.
சம்பவ நடந்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு நீதிபதி கிருஷணுக்கு போன் செய்த மகிபால், ‘உனது மனைவி மற்றும் மகனை கொன்று விட்டேன்’ என, கூறி உள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் வீடியோ எடுத்துள்ளனர். அருகில் இருந்த சிலர் ரித்து மற்றும் துருவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த ரித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் துருவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ நடந்த 2 மணி நேரத்திற்கு பிறகு மகிபால் கைது செய்யப்படடார். அவரிடம் நடந்த விசாரணையில், என்னால் இதை நம்பமுடியவில்லை என்று மட்டும் மகிபால் திரும்ப, திரும்ப கூறி வருவதாகவும், மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் காணப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மகிபால், நீதிபதியிடம் தனி பாதுகாலராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கொடூர கொலை சம்பவத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

தகவல் -கிராமத்தான் முயாஷா.

 

வாடா மல்லி

உணவிலும் மாற்றம்…!
உடலிலும் மாற்றம்…!

இன்றைய மருத்துவ சிந்தனை

— வாடா மல்லி —

கண் அரிப்பு , சிகப்பு தன்மை மாற
—————————————-
வாடாமல்லி பூக்கள், இலைகளை தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சி வடிகட்டி ஆறவைத்து அந்த நீரில் கண்களை கழுவி வந்தால் கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை, அரிப்பு சரியாகும்.

சேற்றுப் புண் குணமாக
—————————-
வாடாமல்லி இலை, பூக்களை சிறிதளவு எடுத்து நீர்விடாமல் நன்றாக அரைத்து வைத்துக் கொண்டு அவற்றை விளக்கெண்ணெய் (250 மில்லி) அளவு கலந்து இதனுடன் சிறிதளவு மஞ்சள் பொடி சேர்க்கவும். பின்பு தைலபதத்திற்கு காய்ச்சி வைத்துக்கொண்டு பயன்படுத்தி வந்தால் சேற்றுபுண்கள் குணமாகும்.

உயர் இரத்த அழுத்தம் குறைய
———————————–
வாடாமல்லி பூக்களை (10) எடுத்து தண்ணீர் (1லிட்டர்) சேர்த்து காய்ச்சி அதனுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து குடித்துவந்தால் உயர் ரத்த அழுத்த நிலை மாறும். மேலும் பித்தப்பையில் ஏற்படும் கற்களை கரைக்கும்.

தோலின் சுருக்கம் ,கருமை மறைய
—————————————–
வாடாமல்லி பூ மற்றும் இலைகளைஅரைத்து அதன் பேஸ்ட்டை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு கப்பில் சிறிதளவு தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் தேவையான அளவு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை உடலின் மேற்பூச்சாக பயன்படுத்தும் போது தோலின் மிருது தன்மையை பாதுகாக்கிறது. தோலில் ஏற்படும் சுருக்கங்கள், உலர் தன்மை ஆகியவற்றை போக்கக் கூடியதாக இது விளங்குகிறது. தோலில் ஏற்படும் வயோதிகம் போன்ற தன்மை மற்றும் தோலின் கருமை நிறம் மாற்றம் அடையும்.

ஆஸ்துமா பிரச்சனைக்கு தீர்வு
———————————–
வாடாமல்லி இதழ்களை அரைத்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலக்கி அதனுடன் சுக்கு பொடி(2சிட்டிகை) மிளகு பொடி(2சிட்டிகை) ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் இவற்றை அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின்னர் இதை எடுத்து வடிகட்டி கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை சூடாக இருக்கும் போதே பருகுவதன் மூலம் ஆஸ்துமாவால் ஏற்படும் தொல்லையை முழுவதும் தணிக்கிறது. மேலும்
இந்த தேனீரை முறையாக குடித்து வருவதன் மூலம் சளியை கரைத்து கட்டுப்படுத்துகிறது. இருமலை போக்குகிறது.

KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.

Cell : 96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-

(https://www.facebook.com/keezhmandur/)
. ஞாயிறு 14 அக்டோபர் 2018_

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg

 

-தகவல் -கிராமத்தான் முயாஷா.-

24 நிமிடத்தில் மோட்சம்!

24 நிமிடத்தில் மோட்சம்!
24 நிமிடத்தில் மோட்சம்!

‘மோட்சம் கிடைக்க வேண்டுமானால்,

                      தவமிருங்கள், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுங்கள், குறைந்த பட்சம், நாம ஜபமாவது செய்யுங்கள்…’

என்று சொல்கின்றனர், மகான்கள். ஆனால்,

வெறும், 24 நிமிடத்தில் மோட்சத்தை  - பிறப்பற்ற நிலையை எளிதில் பெற ஒரு வழி இருக்கிறது. 
வேலுார் மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள கடிகாசல மலையிலுள்ள யோக நரசிம்மர் கோவிலுக்கு செல்ல வேண்டும். 
கடிகாசலம் என்று இந்த மலைக்கு பெயர் வரக் காரணம் உள்ளது… 
கடிகை என்றால் ஒரு நாழிகை அல்லது 24 நிமிடம். சலம் என்றால் மலை. ஆம்… 24 நிமிடம் இந்த மலையில் அமர்ந்திருந்தாலே போதும், நரசிம்மரின் அருளால் பாவங்கள் நீங்கி, மோட்ச பலனை அடையலாம்.
பிரகலாதனுக்கு, நரசிம்மராக காட்சி கொடுத்தார், பெருமாள். இந்த அவதாரத்தை தரிசிக்க விரும்பிய

வாமதேவர், வசிஷ்டர், காஷ்யபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய ரிஷிகள், கடிகை மலையில் தவமிருந்தனர். 
இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது… 
விஸ்வாமித்திரர் இத்தலத்தில் ஒரு நாழிகை நேரம், நரசிம்மரை வழிபட்டதன் பயனாக, ‘பிரம்ம ரிஷி’ பட்டம் பெற்றார். அதே போல் தங்களுக்கும் நரசிம்மரின் தரிசனம் கிடைத்தால் மோட்சம் நிச்சயம் என, கருதினர். ஆனால், இந்த ரிஷிகளை, காலன், கேயன் என்ற அரக்கர்கள் தொந்தரவு செய்தனர். தங்களை காக்க, பெருமாளை வேண்டினர், ரிஷிகள்.
ஆஞ்சநேயரை அழைத்து, ரிஷிகளுக்கு உதவும்படி கூறினார், பெருமாள். பெருமாளிடமிருந்து சங்கு, சக்கரத்தை வாங்கி, அரக்கர்களை வென்று, ரிஷிகளை காப்பாற்றினார், ஆஞ்சநேயர். பின், ரிஷிகளின் தவம் தடையின்றி தொடர்ந்தது. 
அவர்களுக்கு நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார், பெருமாள். அவர்களது விருப்பப்படி, இத்தலத்தில் யோக நரசிம்மராக அருள்பாலித்து வருகிறார், பெருமாள்.
பெருமாள் கோவில்களில் மூலவரும், உற்சவரும் ஒரே சன்னிதியில் தான் இருப்பர். ஆனால், இங்கு மூலவர் யோக நரசிம்மர், 500 அடி உயரமுள்ள பெரிய மலையில் இருக்கிறார். இவரைத் தரிசிக்க, 1,305 படிகள் ஏற வேண்டும்.
மலை அடிவாரத்திலிருந்து, 4 கி.மீ., துாரத்தில் உள்ள சோளிங்கரில், உற்சவர் பக்தவத்சலர், சுதாவல்லிக்கு தனித்தனி கோவில் உள்ளது. திருவிழாக்கள் இந்தக் கோவிலில் தான் நடத்தப்படுகிறது.
கடிகை மலை எதிரிலுள்ள சிறிய மலையில், 406 படிகள் ஏறினால், யோக நிலையில் உள்ள ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம். இவர், ஜப மாலை, சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். ‘சதுர் புஜ யோக ஆஞ்சநேயர்’ என்ற பெயர் கொண்ட இவரது கண்கள், பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடியை பார்த்தபடி உள்ளது. 
பெருமாளின், 108 திருப்பதிகளில் இத்தலமும் ஒன்று. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலுக்கும், திருப்பதிக்கும் நடுவில் இத்தலம் அமைந்துள்ளது சிறப்பம்சம். 
குழந்தை பாக்கியம் வேண்டுவோர் மற்றும் திருமணத் தடை உள்ளவர்கள், இத்தலத்தில் அன்னதானம் செய்தால், கயாவில் தானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். 
புதிதாக வீடு கட்டுபவர்கள், பணிகள் தடையின்றி நிறைவேற, சிறு கற்களை எடுத்து அடுக்கி வைக்கின்றனர். பவுர்ணமியன்று கிரிவலம் வருகின்றனர். 

மலைக்கோவில், காலை 8:00 மணி முதல், மாலை, 5:30 மணி வரையிலும், கீழ் கோவில், காலை, 6:00 மணி முதல் 12:00 மணி வரையும், மாலை, 5:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரையும் திறந்திருக்கும்.
வேலுார் – திருத்தணி சாலையில், 60 கி.மீ., துாரத்திலும், சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக, 125 கி.மீ., துாரத்திலும் சோளிங்கர் உள்ளது. 

நன்றி-தி.செல்லப்பா.

தகவல் -கிராமத்தான் முயாஷா.

மாஜி அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்- தலைவர்கள் அஞ்சலி…!

முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தி.மு.க.வில் செல்வாக்குமிக்கவராக இருந்தவர் பரிதி இளம் வழுதி, 58 கடந்த,1996-2001-ம் ஆண்டுகளில் தமிழக சட்டசபை துணை சபாநாயகராகவும், 2006-11-ம் ஆண்டுகளில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் இருந்தார். பின்னர் அக்கட்சியில்இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். 6 முறை தமிழக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். நேற்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து இன்று சென்னையில் காலமானார்.

தகவல் – கிராமத்தான் முயாஷா.

விட்டு விட்டு வெளியேறும் சிறுநீர் சீராக வெளியேற..

சத்துக்கள்
——————–
நார்ச் சத்து , புரதச் சத்து , சுண்ணாம்புச் சத்து , இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.

தீர்வு
———————————–
முற்றின முருங்கை விதை(10) கத்தரிக்காய் (1 வரியுள்ள நாட்டு காய் ) கத்தரிக்காயை 10 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறப்போட்டு பின்பு எடுத்து இரண்டையும் மிக்ஸியில் போட்டு அதனுடன் தக்காளி (1) , மஞ்சள் தூள் (சிறிதளவு) சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை வேளையில் குடிக்கவும்.

முற்றின முருங்கை விதை(10) பீர்க்கங்காய் (100 கிராம் தோலுடன்) நறுக்கி பின்பு எடுத்து இரண்டையும் மிக்ஸியில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள் (சிறிதளவு) சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி மாலை வேளையில் குடிக்கவும்.

ஒரு வேளை உணவில் தினமும் முருங்கைக்காயை நீராவியில் வேகவைத்து பொறியலாக சாப்பிட்டு வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-

(https://www.facebook.com/keezhmandur/)
புதன் 10 அக்டோபர் 2018

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg

தகவல் -கிராமத்தான் முயாஷா.

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்