திங்கள். பிப் 18th, 2019

- மு.ஷாஜஹான்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், போலீசாரும், குற்றவாளிகளும் கைகோர்த்து செயல்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், போலீசாரும், குற்றவாளிகளும் கைகோர்த்து செயல்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, ஆறு ஆண்டுகளில், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் உள்ள, 2.15 லட்சம் வழக்குகளில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், பேசி தீர்க்கப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த உயர் நீதிமன்றம், போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உள்துறை செயலர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய, சசிகுமார் என்பவருக்கு, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், மரணம் அடைந்ததாக, அவரது சகோதரர் புகார் கூறினார். ஊத்துக்குளி போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். சசிகுமார் குடும்பத்துக்கு, 3.94 லட்சம் ரூபாய் வழங்க, தனியார் நிறுவனத்துக்கு, தொழிலாளர் நலத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், தனியார் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. நீதிபதி, எம்.வி.முரளிதரன் முன், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் பதிவு செய்த வழக்கின் நிலை பற்றி, கேள்வி எழுப்பினார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், அவினாசி நீதிமன்றம், வழக்கை முடித்து விட்டதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், 2009 முதல், 2014 வரை, முடித்து வைக்கப்பட்ட வழக்குகள் எத்தனை என்ற விபரங்களை, தாக்கல் செய்யும்படி, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு, நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பதிவாளர் ஜெனரல் தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், ஆறு ஆண்டுகளில், 2.15 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதிகபட்சமாக,
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 28 ஆயிரத்து, 573 வழக்குகளும்,
மதுரை மாவட்டத்தில், 26 ஆயிரத்து, 351 வழக்குகளும்
முடித்து வைக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக,
நீலகிரி மாவட்டத்தில், 193 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. அறிக்கையை பார்த்த நீதிபதி முரளிதரன், அதிர்ச்சி அடைந்தார்.

‘முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின், விசாரணை நடத்தாமல், போலீசார் துாங்கி விட்டனரா; குற்றவாளிகளுடன் சேர்ந்து செயல்பட்டனரா’ என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.’ஆறு ஆண்டுகளில், இத்தனை வழக்குகள் என்றால், 2000ம் ஆண்டில் இருந்து கணக்கு எடுத்தால், 10 லட்சம் வழக்காவது முடிக்கப்பட்டிருக்கும்’ என்றும் தெரிவித்தார்.

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஏ.நடராஜன், ”இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலங்களில் தவிர்க்க, தனி குழு அமைத்து, விசாரிக்கப்பட வேண்டும். போலீசுக்கு மட்டும் அல்லாமல், மாஜிஸ்திரேட்டுகளுக்கும் வழிமுறைகள் அளிக்கப்பட வேண்டும்,” என்றார்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, தலைமை குற்றவியல் வழக்கறிஞரும் பரிந்துரைகள் அளிக்கும்படி, நீதிபதி அறிவுறுத்தினார். பின், இவ்வழக்கில், உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி.,யை சேர்த்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார். விசாரணையை, வரும், 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ஆசனக் குழாய் சுருக்கம் , ஆசனவாய் எரிச்சல் , அதிக சூடு , முதுகு வலி அனைத்தும் சரியாக.

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை

காயமே (உடலே) மருத்துவர்…! காய்கறிகளே மருந்து !!!

உணவை மருந்தாக்கு…..! மருந்தை உணவாக்காதே…..

தலைப்பு :

ஆசனக் குழாய் சுருக்கம் , ஆசனவாய் எரிச்சல் , அதிக சூடு , முதுகு வலி அனைத்தும் சரியாக
————————————————-

காய் : வெண்டைக்காய்
————————————————-

சத்துக்கள்
——————–
வைட்டமின்கள் (ஏ, பி, சி, ஈ மற்றும் கே), கனிமங்கள், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ளது. மேலும் சவ்வு போன்ற நார்ச்சத்தும் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.

தீர்வு
———————————–
பிஞ்சு வெண்டைக்காய் (5 கிராம்) , வெந்தயம் (100 கிராம்) , சிறு பருப்பு
(50 கிராம்), சீரகம் (10கிராம்) ,உளுந்தம் பருப்பு (50 கிராம்) ,புதினா இலை (25கிராம்) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக வேகவைத்து பின்பு கடைந்து களிபோல் செய்து ஒரு வேளை உணவாகவோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதுமோ சாப்பிட்டு வரவும்.

மதியம் வேளை உணவில் வெண்டைக்காயை நீராவியில் வேகவைத்து அதனுடன் தேங்காயை நிறைய துருவி சேர்த்து கலந்து பொறியலாகவோ அல்லது பச்சையாகவோ நிறைய சாப்பிட்டு வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————-
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg

உயர் இரத்த அழுத்தம் சீராக.

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை…!—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————-
உயர் இரத்த அழுத்தம் சீராக
—————————————————-

-காய் : முருங்கைக் கீரை
————————————————–

சத்துக்கள்
——————–
நார்ச் சத்து , புரதச் சத்து , சுண்ணாம்புச் சத்து , இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.

தீர்வு
———————————–
முருங்கை இலையை (1 கைப்பிடி ) அளவு எடுத்து அரைத்துச் சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் , சிறிதளவு மிளகுத் தூள் இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கி காலை வேளையில் குடித்து வந்தால் இரத்த அழுத்தம் மற்றும் இதயமும் சீராக இயங்கும்.

தினந்தோறும் இரண்டு வெள்ளரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இவற்றில் உள்ள சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————-
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
வியாழன் 03 சனவரி 2019

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg

தகவல் – கிராமத்தான் முயாஷா.

புதுமண தம்பதிக்கு கழிப்பறை சாதனம் பரிசு…!

பிரயாக்ராஜ், உத்தர பிரதேசத்தில், ‘ஜெய்ஸ்வால் சமாஜ்’ அமைப்பு சார்பில் நடந்த, இலவச திருமண நிகழ்ச்சியில், தம்பதிக்கு, கழிப்பறை சாதனம் பரிசாக வழங்கப்பட்டது.உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள பிரயாக்ராஜில், ஜெய்ஸ்வால் சமாஜ் என்ற அமைப்பு சார்பில், ௧௮ ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.இதையொட்டி, மணப்பந்தலுக்கு, திருமண ஜோடிகள், குதிரைகளில், ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். திருமணத்துக்கு பின், தம்பதியருக்கு, ஜெய்ஸ்வால் சமாஜ் சார்பில், கழிப்பறை சாதனமும், மரக்கன்றும், பரிசாக வழங்கப்பட்டன.வழக்கமாக, பீரோ, தையல் மிஷின், பாத்திரங்கள் போன்றவை தான் பரிசாக வழங்கப்படும். ஆனால், முதல் முறையாக, கழிப்பறை சாதனம் பரிசாக வழங்கப்பட்டது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இது பற்றி, ஜெய்ஸ்வால் சமாஜின் தலைவர், டி.என்.ஜெய்ஸ்வால் கூறியதாவது:மத்திய அரசின், ‘துாய்மை இந்தியா’ திட்டம், எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதனால், வழக்கமாக தரும் பரிசு பொருட்களுக்கு பதிலாக, கழிப்பறை சாதனத்தை பரிசாக அளித்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி:- http://www.dinamalar.com/news_detail.asp?id=2171783

நாட்பட்ட விக்கல் குணமாக.

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
நாட்பட்ட விக்கல் குணமாக

—————————————
சத்துக்கள்
——————–
வைட்டமின் பி1, பி2, பி6, டி, சி மற்றும் பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச்சத்துக்களான பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

தீர்வு
————- ————-
அரசாணிக்காய் (100 கிராம்) தோலுடன் நன்றாக துருவி அதனுடன் புடலங்காய் (100 கிராம்) , முருங்கை விதைப் பருப்பு (10) அளவு சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்து வைத்துக்கொண்டு நாள் முழுவதும் கோஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும் . முடிந்தவுடன் மறுபடியும் தயார் செய்து குடித்து வரவும்.

மதியம் வேளை உணவில் அரசாணிக்காய் மற்றும் புடலங்காயை தோலுடன் துருவி நீராவியில் வேகவைத்து அதனுடன் தேங்காய் நிறையத் துருவிப் போட்டு பொறியலாக செய்து சாப்பிட்டு வரவும்.

கடுகை (1 ஸ்பூன்)எடுத்து இரவு முழுவதும் ஊறவைத்து, அந்த தண்ணீரை அதிகாலையில் குடித்து வந்தால் நாள்பட்ட விக்கல் குணமாகும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————-
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
திங்கள் 17 டிசம்பர் 2018

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

சிறுநீரக கல் கரைய.

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
சிறுநீரக கல் கரை
———————————————————
காய் : கத்தரிக்காய்
—————————————————-
சத்துக்கள்
————-
——-
விட்டமின் B2 , C , B6 , தையமின் , நியசின் , மெக்னீசியம் , பாஸ்பரஸ் , காப்பர் , பொட்டாசியம் , மங்கனீசு , கால்சியம் , இரும்புச் சத்து , போலிக் ஆசிட் , நார்ச் சத்து

தீர்வு
———————————
ஒரு இளம் பிஞ்சு கத்தரிக்காயை
(வரியுள்ள , விதையுள்ள காய்) எடுத்துக்கொண்டு ஒரு 10 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறப்போட்டு பின்பு எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் கோவக்காய் (10) ,ஒரு எலுமிச்சம்பழத்தின் தோலை நறுக்கி போட்டு , மிளகு(2) , கொஞ்சம் மஞ்சள் தூள் , தேவையெனில் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

பீர்க்கங்காய் கொடியின் வேர்ப் பகுதியைச் சேகரித்து- நன்கு உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தினம் இருவேளை இரண்டு சிட்டிகை அளவுக்கு எடுத்து சுடுநீரில் கலந்து உண்டு வர நாளடைவில் சிறுநீரகக் கற்கள் வெளியேறும்.

ஏலக்காய் , தனியா , நெருஞ்சில் இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் பொடியைப் பாலில் கலந்து காலை மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————-
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
சனி 15 டிசம்பர் 2018

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3
மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

பச்சை நிறத்துடன் கூடிய சளி மற்றும் பசையுடன் கூடிய சளி வெளியேற்றம் நீங்க.

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
பச்சை நிறத்துடன் கூடிய சளி மற்றும் பசையுடன் கூடிய சளி வெளியேற்றம் நீங்க
—————————-

சத்துக்கள்
——————–
விட்டமின் B2 , C , B6 , தையமின் , நியசின் , மெக்னீசியம் , பாஸ்பரஸ் , காப்பர் , பொட்டாசியம் , மங்கனீசு , கால்சியம் , இரும்புச் சத்து , போலிக் ஆசிட் , நார்ச் சத்து

தீர்வு
———————————
இரண்டு இளம் பிஞ்சு கத்தரிக்காயை
(வரியுள்ள , விதையுள்ள காய்) எடுத்துக்கொண்டு ஒரு 10 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறப்போட்டு பின்பு எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் கோவக்காய் (10) , ஒரு எலுமிச்சம்பழத்தின் தோலை நறுக்கி போட்டு அதனுடன் தக்காளி(1), மிளகு(2) , கொஞ்சம் மஞ்சள் தூள் , தேவையெனில் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————-
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
வியாழன் 13 டிசம்பர் 2018

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg

தகவல் – கிராமத்தான் முயாஷா.

தோல் சார்ந்த பிரச்சனைகள் தீர….

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
தோல் சார்ந்த பிரச்சனைகள் தீர
—————————————
காய் : கோவக்காய்
———————-
————————–
சத்துக்கள்
——————–
வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன

தீர்வு
———————————–
கோவைக்காய் (10) , கத்தரிக்காய்
(2 இளம் பிஞ்சுகாய்) , பீர்க்கங்காய் (150 கிராம் ) , வெற்றிலை (2) , புதினா (சிறிதளவு) இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு மோர் அல்லது தண்ணீர் நிறைய ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு காலை முதல் மாலை வரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும் . தீர்ந்துவிட்டால் மறுபடியும் தயார் செய்து குடித்து வரவும்.

கோவைக்காயை நீராவியில் வேக வைத்து பொறியலாக செய்து அவற்றில் தேங்காயை அதிகமாகப் போட்டு உணவிற்கு அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்

பின்பு பசித்தால் உணவு எடுத்துக்கொள்ளுங்கள்

மேற்பூச்சு
—————————————–
இரணக் கள்ளி செடியின் சமூலத்தை எடுத்து இடித்து சாறு (500 மில்லி) , தேங்காய் எண்ணை (400 மில்லி) , அதனுடன் கஸ்தூரி மஞ்சள் (10 கிராம்) , நீரடிமுத்து (20 கிராம்) , கார்போக அரிசி
(30 கிராம்) , மஞ்சள் (40 கிராம்) , கசகசா
(5 கிராம்) சேர்த்து இடித்து அனைத்தையும் ஒன்றாக கலந்து அடுப்பில் சிறு தீயாக கொதிக்க வைத்து சாறு சுண்டிய பின்னர் வடிகட்டி வைத்துக் கொண்டு, காலையில் எழுந்து சர்மநோய் உடையவர் தலை முதல் கால் வரை மேலுக்குப் பூசி அரைமணி நேரம் ஊரவைத்துப் பின்னர் இளஞ்சூடான நீரில் சீயக்காய்த் தூள் போட்டுக் குளித்துவந்தால் குட்டம், மேகநீர், ஊரல் படை, கருமேகநீர், சம்பந்தமான சர்ம நோய், செம்மேகப்படை, கிரந்தி நோய்கள் அனைத்தும் நீங்கும்.

இரவு படுக்கப் போகும் முன்
————————————————–
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
செவ்வாய் 11 டிசம்பர் 2018

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
-தகவல் – கிராமத்தான் முயாஷா.

குத்தாலத்தில் கடைஞாயிறு தீர்த்தவாரி திரளான பக்தர்கள் நீராடினர்.

குத்தாலத்தில், நடைபெற்ற கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் குத்தாலத்தில், கார்த்திகை மாத கடைசி ஞாயிற்று கிழமையான நேற்று, தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. உக்தவேதீஸ்வரர், காளீஸ்வரர், சோழீஸ்வரர், மன்மதீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள் ஆகிய கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் மங்கள வாதியங்கள் முழங்க, வீதி உலா வந்து, காவிரி தீர்த்த படித்துறையில் எழுந்தருளினர்.அங்கு, அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.வித்துன்மாலி என்ற அரக்கன், சிவபெருமான் அருளால் சூரியனைப் போல ஒளிபடைத்த கிரகமாக மாறியதால், சூரியனால், பூமிக்கு ஒளி வழங்க முடியாமல் போனது.
இதையடுத்து, சூரிய பகவான் குத்தாலத்தில் தவம் இருந்து, சிவபெருமான் அருள் பெற்றார் என்பதன் ஐதீகமாக, கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

குண்டு குழந்தை – தவறான உணவால் அதிகரிப்பு: பெற்றோருக்கு ‘ரெட் அலர்ட்’.

வினோதினி எவ்வளவு சாப்பிட்டாலும் ‘சத்து வைப்பதில்லை’ என்பதுதான், சமீபகாலமாக தாய் கார்த்திகாவை வாட்டியெடுக்கும் முக்கிய கவலை. நாத்தனார் வீட்டு கல்யாணத்துக்குள், எப்படியும் அவளை ‘கொழுக் மொழுக்’ ஆக மாற்றி விட வேண்டுமென்பதுதான் உடனடி இலக்கு. கார்த்திகாவைப் போல் பல அம்மாக்களின் கவலையும், குழந்தை பார்க்க புஷ்டியாக இருக்க வேண்டுமென்பதுதான்.

ஆனால், ஆரோக்கியத்துக்கும் உடல் எடைக்கும் சம்பந்தமில்லை என்று அடித்துக்கொள்ளும் டாக்டர்கள், மற்றொரு அதிர்ச்சி தகவலையும் கூறுகின்றனர். அது…அதிக உடல் பருமனுள்ள குழந்தைகள் பட்டியலில், தமிழகம் வெகு விரைவில் முன்னிலை பெற போகிறது என்பதுதான்.’போதும்மா’ என்று குழந்தைகள் சொன்னாலும், உணவை திணிப்பதில்தான் அம்மாக்களின் முழு கவனமும் இருக்கிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு, புத்தகப்பையை விஞ்சிவிடும் அளவு, மதிய உணவு கொடுத்தனுப்புகின்றனர். இடைவேளை விடாமல் சாப்பிடும் அளவுக்கு, விளையாட அனுப்புவதில்லை. இதுவே, எடை அதிகரிக்க காரணம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

சர்க்கரை நோய்க்கு அழைப்பு

‘பள்ளி விட்டால் வீடு; மீண்டும் பள்ளி’ என 24 மணி நேரத்தையும் நான்கு சுவர்களுக்குள் குழந்தைகள் கழிக்கின்றனர். இதுதான் எடை அதிகரிக்க காரணம். இந்தியன் ஜர்னல் ஆப் மெடிக்கல் மேற்கொண்ட ஆய்வில், ஆறு முதல் 12 வயதுக்குட்பட்ட நகர்ப்புற குழந்தைகளில், 29 சதவீதம் பேர், அதிக எடையுடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக உடல் எடை காரணமாக, 100ல், ஆறு குழந்தைகள் சர்க்கரை வியாதிக்கு ஆளாவது அதிர்ச்சிக்குரிய தகவல்.

எடை அதிகரிக்க காரணம்

குழந்தைகளின் எடையை கூட்டுவதில், உப்பு சுவையுள்ள நொறுக்கு தீனிக்குதான் முக்கிய பங்கு. அதிக கலோரிகள் கொண்ட இந்த பாக்கெட் ஸ்னாக்ஸ், மென்மேலும் சாப்பிடும் உணர்வை துாண்டுகிறது. தொடர்ச்சியாக குறிப்பிட்ட பாக்கெட் உணவுகளை, குழந்தைகள் விரும்ப இதுவே காரணம்.’டிவி’, மொபைல் போன்களில் ஆழ்ந்தபடி சாப்பிடுவோர், தேவையை விட அதிக உணவு உட்கொள்கின்றனர். அதிக உடல் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோயில் துவங்கி, இதய நோய்களுக்கும் சிவப்பு கம்பளம் விரிக்கும்.ஆகவே, பெற்றோரே… குழந்தைகள் சுறுசுறுப்பாக, உயரத்துக்கு ஏற்ற எடையுடன் உள்ளனரா… கவலையை விடுங்க!

பாரதியை மறக்காதீங்க!

‘மாலை முழுவதும் விளையாட்டு’ என்ற பாரதி வரிகளை பின்பற்றினாலே போதும். மண்ணில் விளையாடினால், கிருமிகள் தொற்றி விடும் என நினைத்து, விளையாட அனுமதிக்காததால், ஏராளமான நோய்களுக்கு, உடல் சிவப்பு கம்பளம் விரித்துவிடுகிறது. பசித்தால் சாப்பிடு என குழந்தைகளை பழக்கினாலே போதும். பசி எடுக்காத போது சாப்பிடும் உணவு விஷம் தான். அதிக எடை, கவனச்சிதறலுக்கும் காரணமாக அமைந்துவிடும்.
– சதீஷ்குமார்,
ஒருங்கிணைப்பாளர், கல்வியாளர் சங்கமம்.

பாக்கெட் உணவை பக்கத்தில் விடாதீங்க!

* குழந்தையின் ஆரோக்கியத்துக்கும், எடைக்கும் சம்பந்தமே இல்லை. வீட்டில் சமைக்கும் உணவை சாப்பிட கொடுப்பது தான் சிறந்தது. கால்சியம் வேண்டுமென, பலர் அளவுக்கு அதிகமாக பால் கொடுக்கின்றனர். பால், பால் பொருட்களை அதிகம் சாப்பிட கொடுப்பதால், குடல் சார்ந்த நோய்கள் வரலாம்.
*பாக்கெட் உணவுகளும், எடை அதிகரிக்க காரணம். ஒரு டம்ளர் பால், இரண்டு பிஸ்கெட் சாப்பிடும் குழந்தைகளுக்கு, நாள் முழுக்க பசியே எடுக்காது. சாப்பிட அடம் பிடிப்பதற்கு, இதுதான் காரணம்.
* மொபைல்போன் பார்த்தபடி சாப்பிடுவதால், உணவை அரைக்காமல் விழுங்குவர்.
இது, செரிமான பிரச்னைக்கும் காரணமாகிவிடும். உயரத்துக்கேற்ற எடையோடு, சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு, சிறப்பு கவனிப்பு தேவையில்லை.

– தர்மேந்தர், குழந்தைகள் நல மருத்துவர், கோவை அரசு மருத்துவமனை.

உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது

உயரத்துக்கு ஏற்ற எடைதான் சரியான அளவீடு. அதிக உணவால், 27 சதவீத குழந்தைகளுக்கு, எடை மட்டுமே கூடுகிறது. இதிலும், 14-18 வயதுக்கு உட்பட்டோரில், 41 சதவீதம் பேர், அதிக உடல் எடையால் அவதிப் படுகின்றனர் என, உலக சுகாதார ஆய்வு நிறுவன புள்ளி விபரம் கூறுகிறது.

நகர்ப்புறத்திலே ‘டாப்’

* நகர்ப்புறத்தில் வசிக்கும் குழந்தைகள் 100 பேரில், 36 பேர் அதிக உடல் எடையுடன் காணப்படுகின்றனர்.

*கிராமம், புறநகர் பகுதிகளில் இது, 25 சதவீதமாக உள்ளது.

*41.2 சதவீத குழந்தைகள், விளையாடுவதே இல்லை.

*அளவுக்கு அதிகமான எடையால், 22 சதவீத குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர்.

* ஐந்து வயதுக்குட்பட்ட, 27 சதவீத குழந்தைகள், உயரத்தை விட குறைந்த எடை கொண்டவர்களாக உள்ளனர்.

* 23 சதவீதம் பேர், உயரத்தை விட, அதிக எடையுடன் காணப்படுகின்றனர்.

ஆதாரம்: இந்தியன் ஜர்னல் ஆப் மெடிக்கல்.

மனஅழுத்தமும் காரணம் (மேலும்…)

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்