வி. அக் 24th, 2019

நிகழ்வு

Events – நிகழ்வுகள்

கீழ்மாந்தூர் அருள்மிகு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா
23 கீழ்மாந்தூர்
அருள்மிகு மாரியம்மன் கோவில்
தீமிதி திருவிழா……..

காப்புக்கட்டுதல் 17 ஏப்ரல் 2019

தீமிதி திருவிழா 26 ஏப்ரல் 2019

-கீழ்மாந்தூர் கிராமம்.

தினமும் 10 இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் மரணம்.

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களில், சராசரியாக, தினமும், 10 பேர் உயிரிழப்பது தெரிய வந்துள்ளது. வளைகுடாவில் உள்ள, பஹ்ரைன், ஓமன், கத்தார், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். இந்த நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் நிலை குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேட்கப்பட்ட கேள்விக்கு காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பு, ஆய்வு அறிக்கை அளித்துள்ளது.

இந்த அமைப்பை சேர்ந்த வெங்கடேஷ் நாயக் கூறியதாவது:

பஹ்ரைன், ஓமன், கத்தார் மற்றும் சவுதியில் உள்ள இந்திய அமைப்புகள் அளித்த தரவுகளின் அடிப்படையில், இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உலகளவில் வசிக்கும் இந்தியர்கள் நம் நாட்டுக்கு அனுப்பும், தொகையில் பாதியை, வளைகுடா இந்தியர்கள் அனுப்புகின்றனர். கடந்த, 2012 முதல் 2018, ஜூன் வரை, 24,570 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். வளைகுடா நாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு ஏழு கோடி ரூபாய்க்கும், 117 பேர் வீதம் உயிரிழக்கின்றனர். அதாவது தினமும், 10 பேர் உயிரிழக்கின்றனர். இதன் மூலம், வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

உணவிலும் மாற்றம்…! உடலிலும் மாற்றம்…!

அன்புடன் அழைக்கின்றோம்
கோவை
தமிழ்பாரதி இயற்கை அங்காடி
நடத்தும்

கோவை பாலாவின்

காயமே(உடலே) மருத்துவர் !!
காய்கறிகளே மருந்து !!!

உணவை மருந்தாக்கு!!!
மருந்தை உணவாக்காதே !!!

என்னும் தலைப்பில் வாரந்தோறும் வார இறுதி நாட்களில் நடைபெறும் வாழ்வியல் நிகழ்ச்சி.

12 காய்கறிகளைக் கொண்டு உடலின் பிணிகளிலிருந்து விடுபடும் வாழ்வியல் நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்வு .

உணவிலும் மாற்றம் !!!
உடலிலும் மாற்றம் !!!!

என்ற கோட்பாட்டின் படி இந்த வாரம்
பாரம்பரிய காய்களைக் கொண்டு உடம்பில் உண்டாகும் குறைபாடுகளை சரி செய்வது எப்படி என்பதை பற்றியும். உண்ணும் உணவு முறை மற்றும் வாழும் வாழ்வியல் முறைகளை மாற்றுவதன் மூலம் எப்படி நிவர்த்தி செய்யலாம் !!!

“” இரண்டாம் நிகழ்வின் நிகழ்வு – 7″”

தலைப்பு. : முருங்கை

அறிந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
தொடர்புக்கு:
இடம் : தமிழ் பாரதி,.இயற்கை அங்காடி.
திருச்சி மெயின் ரோடு,
பெர்க்ஸ் ஆர்ச் அருகில்
கோயமுத்தூர்.
நாள் : சனிக் கிழமை (27.10.2018)
நேரம் : மாலை 6.00 மணி
அனுமதி இலவசம்

திரு.கருணாநிதி அவர்கள்
ph ; 9443002969 / 7810852230

மயிலாப்பூர் அக்.28: தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

மயிலாப்பூர் அக்.28: இது நமது பொதுக்கூட்டம், நமது விழா, நமது உரிமை முழக்கம், நமது கொண்டாட்டம் என அனைத்துமானது. அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்.

சிறை அடக்குமுறைகள் ஒரு இயக்கத்தினை சிதைத்து விட முடியாது. அடக்குமுறையை எதிர்த்து நிற்பதே இயக்க அரசியல்.
தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடினால் சிறையில் தள்ளி முடக்க நினைக்கும் பாசிச பாஜக அரசுக்கு ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கிற கூட்டத்தின் மூலம் மிக முக்கியமான செய்தியை நாம் சொல்லுவோம்.

நீ அடக்க அடக்க, நாங்கள் அசுர பலத்துடன் மேலெழுவோம் என்பதை பாசிசத்திற்கு சொல்லுவோம். அடக்குமுறைக்கு உள்ளான தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றுகிறார். மத்திய அரசின் மக்கள் விரோத மசோதாக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் அம்பலப்படுத்த இருக்கிறார்கள்.

அடக்குமுறைகளை எதிர்த்தே பழக்கப்பட்ட, இயக்க அரசியலின் முன்னோடி தந்தை பெரியாரை உயர்த்திப் பிடிப்போம். நம் ஏழு நிரபராதித் தமிழரை விடுவிக்கக் கோருவோம்.

தந்தை பெரியார் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.
அக்டோபர் 28, ஞாயிறு மாலை 5 மணி,
மயிலாப்பூர், மாங்கொல்லை.

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டி

மயிலாடுதுறை அக் 21: இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி, நேரு யுவகேந்திரா நாகை மாவட்டம் சார்பில் மாநில அளவிலான யோகாசன போட்டி தியாகி.G.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பள்ளி முதல் கல்லூரி வரை மாணவ மாணவிகள் வயது அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 10 பிரிவுகளில் பங்கேற்றனர். போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். 

மாஸ்டர் ரவிச்சந்திரன் முன்னிலை நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக அண்ணா திராவிட கழக அவைத்தலைவர் P.N.ரத்தினகுமார், மாவட்ட செயலாளர் சுதாகர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாணவ மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

– நன்றி Mayiladuthurai News

 

 

முகநூலில் ஆயிரம் கவிதை எழுதிய கவிஞர் இரா.சிவகுமார்

மயிலாடுதுறை அக்.21: முகநூலில் ஆயிரம் கவிதை எழுதிய கவிஞர் இரா.சிவகுமார் அவர்களுக்கு மயிலாடுதுறையை சேர்ந்த முகநூல் நண்பர்கள் சார்பில் அரிமா சங்க தலைவர், ஜெனிபர் ஸ்வீட்ஸ் உரிமையாளர் பவுல்ராஜ் அவர்களின் தலைமையில் மயிலாடுதுறை, யூனியன் கிளப்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மட்டுமில்லாமல் கடலூர், ஈரோடு, பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் முகநூல் நண்பர்கள் வந்து கவிஞரை வாழ்த்தி பேசினார்கள். மயிலாடுதுறையை சேர்ந்த ஒருவர் முகநூலில் எழுதிய கவிதைக்காக வெளியூரிலிருந்தெல்லாம் முகநூல் நண்பர்கள் வந்திருக்கிறார்கள் என்பதே அவரது கவிதையின் சொல் வன்மைக்கு சான்றாக அமைந்தது.

கவிஞர் பூவை சாரதி அவர்கள் கவிஞர் இரா.சிவக்குமார் அவர்களை வாழ்த்தி தான் எழுதிய “கதிரவன் காலையில் எழுந்திடுமே” என்ற பாடலை பாடினார். இந்த விழாவில் பல கவிஞர்கள், எழுத்தாளர், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு கவிஞரை வாழ்த்தி பேசினார்கள். வாழ்த்தி பேசிய பலர் இவர் எழுதிய கவிதைகளை விரைவில் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

சிறப்புரையாற்றிய திரைப்பட இயக்குனர் யார் கண்ணன் அவர்கள், கவிஞர்கள் இனி காதலையும் காமத்தையும் தவிர்த்து விட்டு மகாகவி பாரதியைப் போல் சமூக சிந்தனையோடு எழுத வேண்டும் என வலியுறுத்தினார்.இறுதியாக கவிஞர் இரா.சிவக்குமார் ஏற்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய மேல்நிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரப்பாண்டியன், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள் கலந்து கொண்டனர். பத்திரிகை ஆசிரியர் சிவசுப்பிரமணியன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்

– நன்றி Mayiladuthurai News

மயிலாடுதுறையில் விழுதுகள் இரத்ததான சேவை மையத்தின் இரத்ததான முகாம்

மயிலாடுதுறை அக்.21: உலகம் முழுவதும் ஒவ்வொரு இரண்டு நொடிகளுக்கும் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு ரத்தம் அவசரமாகவும், அவசியமாகவும் தேவைப்படும். விபத்தில் மனிதர்கள் உயிரிழப்பதற்கு முக்கியக் காரணம் ரத்த சேதமாகும். உடனடியாக இந்த இழப்பைச் சரிசெய்வதன் மூலம் உயிர் காக்கப்படும்.

எனவே இரத்ததானத்தின் அவசியத்தை வலியுறுத்தி மயிலாடுதுறையில் உள்ள கல்லூரி மாணவர்கள் இணைத்து உருவாக்கிய அமைப்பே விழுதுகள் இரத்ததான சேவை மையம். இந்த அமைப்பின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல உயிர்கள் காப்பற்றபட்டுள்ளன என்பதே நிதர்சனமான உண்மை.

21.10.2018 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை, மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் அருகே ROA சங்க அலுவலகத்தில் விழுதுகள் இரத்ததான சேவை மையத்தின் இரத்ததான முகாம் மற்றும் விழுதுகள் அமைப்பின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இரத்ததான முகாமை ஸ்டார் மீடியா உரிமையாளர் உமர் துவக்கி வைத்தார். பல இளைஞர்கள் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்தனர். இந்த முகாமில் 55 யூனிட் இரத்தம் பெறப்பட்டு மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையின் அரசு மருத்துவர் Dr. சிவக்குமார் M.D மற்றும் செவிலியர்கள் மூலம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் விழுதுகள் அமைப்பின் தலைவர் தமிழரசன், செயலாளர் சூர்யா, பொருளாளர் ராகுல் ராஜ், உறுப்பினர்கள் மற்றும் திரளான பொதுமக்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

– நன்றி Mayiladuthurai News

மயிலாடுதுறையில் உதவி தொகையுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி

மயிலாடுதுறை அக்.21: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) மற்றும் கட்டுமான தொழில் வளர்ச்சிக்குழுமம் (CIDC) இணைந்து நடத்தக்கூடிய உதவித்தொகையுடன் இளைஞர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் 18 வயது முதல் 40 வயது வரை யாவரும் பங்கேற்கலாம்.

வேலைவாய்ப்பு பயிற்சிகள்:

  • கட்டுமான வேலை ( Mason General)
  • அசிஸ்டெண்ட் எலக்ட்ரீசியன் ( Assistant Electrician)
  • கம்பி வேலை செய்பவர் (Bar Bender & Steel Fixer )
  • கட்டுமான வேலை டைல்ஸ் கல் பதிப்பது (Mason Tiling)
  • பிளம்பர் ( Plumber)
  • கட்டிட பெயிண்டர் மற்றும் டெகரேட்டர் ( Construction painter & Decorator )

தேவையான ஆவணங்கள்:

கல்வி தகுதி சான்றிதழ், முகவரி சான்று, அடையாள சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 4

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
IAT தொழிற் பயிற்சி நிறுவனம்
M. A. ரசாக் டவர், இரண்டாவது தளம், கச்சேரி ரோடு, மயிலாடுதுறை.
தொலைபேசி: 9842415073

– நன்றி Mayiladuthurai News

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்