வி. அக் 24th, 2019

மயிலாடுதுறை நகரம்

Mayiladuthurai Town – மயிலாடுதுறை நகரம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை டாக்டர்…!

இதோ தையல் போடுறாரே இவருதான் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை டாக்டர் என்ன எவனாவது செத்துட்டா பிணவரைக்கு போஸ்ட்மார்டம் பண்ண போய்டுவாரு..
6 மாசம் முன்ன எனக்கு வேண்டியவங்கலுக்கு தையல் போட போனா பினத்த அறுத்து தைக்கிறவன் தையல் போட வரான் வேண்டாம்னு சண்டை போட்டுட்டு புகார் பண்ணிட்டு வேற தனியார் மறுத்துவ மனைக்கு போய்ட்ட.. இன்னும் அப்படியேதான் இருக்கு.
இந்த நிலைல தான் இருக்கு மயிலாடுதுறை மருத்துவமனை போஸ்ட்மார்டம் பண்ணுறவன், டோக்கன் போடுரவன் குப்ப அள்ளுரவன் தான் தையல் போடுறான்.
Thnks to FB
Vishnu Nadarasan.

மணல் கொள்ளை 10 பேர் கைது.

மயிலாடுதுறை:
கொள்ளிடம் பகுதியில், நூதன முறையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட, ஏழு லாரிகளை பறிமுதல் செய்து, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் அரசின் சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையின் அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் பல தனியார் சவுடுமண் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு மணல் குவாரிகள் செயல்படாத நிலையில், இந்த சவுடு மண் குவாரிகளில் இருந்து மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலத்திற்கும் லாரிகள் மூலம் மணல் கொண்டு செல்லப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இவ்வாறு, செல்லும் மணல் லோடுகளின் எண்ணிக்கை, அரசுக்கு தெரியாமல் இருக்க, ஒரு அனுமதி சீட்டை வைத்து, பல லோடு மணலை எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனர். அதற்காக குவாரி நடத்துபவர்கள் நூதன முறையில், தீயால் அழியக்கூடிய மையை பயன்படுத்துகின்றனர். இந்த நூதன மோசடியால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க, மாவட்ட, எஸ்.பி., விஜயகுமார் உத்தரவிட்டார். அதையடுத்து விசாரணை நடந்து வரும் நிலையில், கொள்ளிடம் போலீசார் நேற்று முன்தினம் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மணல் ஏற்றி வந்த லாரிகளை நிறுத்தி சோதனையிட்டதில் அனுமதி சீட்டுகளும், அதில் அழியக்கூடிய மையால் எழுதியிருப்பதும், நெருப்பை காட்டினால் அழியக்கூடிய மை நிறப்பப்பட்ட பேனாக்கள் இருந்ததும் தெரியவந்தது.இதையடுத்து பேனா மற்றும் அதை பயன்படுத்தி மணல் ஏற்றி வந்த ஏழு லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார், மணல் கொள்ளையில் ஈடுபட்ட, 10 பேரை கைது செய்தனர்.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

மயிலாடுதுறையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகள்

மயிலாடுதுறை அக் 26: தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தை உள்ளடக்கிய மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தின் சார்பில் சில்வர் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் நூறு பள்ளிகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 14 வயதுக்குட்பட்டோர்,17 வயதுக்குட்பட்டோர், 19 வயதுக்குட்பட்டோர் என மூன்று பிரிவுகளில் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் செயல்பட்டனர்.

இறுதியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.

– நன்றி Mayiladuthurai News

மயிலாடுதுறையில் மண்டல அளவிலான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்

மயிலாடுதுறை அக் 24: நம்முடைய தமிழர்களின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பறைசாற்றும் விதமாக நம்முடைய மரபு சார்ந்த தற்காப்பு கலைகள் இருந்து வந்துள்ளன. அத்தகைய பாரம்பரியத்தை காக்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை உள்ளடக்கிய மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தின் சார்பில் சில்வர் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.

இன்று சிலம்பம் போட்டியில் 70 பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மூன்று பிரிவுகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை நிரூபித்தனர். போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் செயல்பட்டனர். இறுதியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

– நன்றி Mayiladuthurai News

மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டி

மயிலாடுதுறை அக் 21: இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி, நேரு யுவகேந்திரா நாகை மாவட்டம் சார்பில் மாநில அளவிலான யோகாசன போட்டி தியாகி.G.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பள்ளி முதல் கல்லூரி வரை மாணவ மாணவிகள் வயது அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 10 பிரிவுகளில் பங்கேற்றனர். போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். 

மாஸ்டர் ரவிச்சந்திரன் முன்னிலை நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக அண்ணா திராவிட கழக அவைத்தலைவர் P.N.ரத்தினகுமார், மாவட்ட செயலாளர் சுதாகர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாணவ மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

– நன்றி Mayiladuthurai News

 

 

முகநூலில் ஆயிரம் கவிதை எழுதிய கவிஞர் இரா.சிவகுமார்

மயிலாடுதுறை அக்.21: முகநூலில் ஆயிரம் கவிதை எழுதிய கவிஞர் இரா.சிவகுமார் அவர்களுக்கு மயிலாடுதுறையை சேர்ந்த முகநூல் நண்பர்கள் சார்பில் அரிமா சங்க தலைவர், ஜெனிபர் ஸ்வீட்ஸ் உரிமையாளர் பவுல்ராஜ் அவர்களின் தலைமையில் மயிலாடுதுறை, யூனியன் கிளப்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மட்டுமில்லாமல் கடலூர், ஈரோடு, பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் முகநூல் நண்பர்கள் வந்து கவிஞரை வாழ்த்தி பேசினார்கள். மயிலாடுதுறையை சேர்ந்த ஒருவர் முகநூலில் எழுதிய கவிதைக்காக வெளியூரிலிருந்தெல்லாம் முகநூல் நண்பர்கள் வந்திருக்கிறார்கள் என்பதே அவரது கவிதையின் சொல் வன்மைக்கு சான்றாக அமைந்தது.

கவிஞர் பூவை சாரதி அவர்கள் கவிஞர் இரா.சிவக்குமார் அவர்களை வாழ்த்தி தான் எழுதிய “கதிரவன் காலையில் எழுந்திடுமே” என்ற பாடலை பாடினார். இந்த விழாவில் பல கவிஞர்கள், எழுத்தாளர், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு கவிஞரை வாழ்த்தி பேசினார்கள். வாழ்த்தி பேசிய பலர் இவர் எழுதிய கவிதைகளை விரைவில் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

சிறப்புரையாற்றிய திரைப்பட இயக்குனர் யார் கண்ணன் அவர்கள், கவிஞர்கள் இனி காதலையும் காமத்தையும் தவிர்த்து விட்டு மகாகவி பாரதியைப் போல் சமூக சிந்தனையோடு எழுத வேண்டும் என வலியுறுத்தினார்.இறுதியாக கவிஞர் இரா.சிவக்குமார் ஏற்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய மேல்நிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரப்பாண்டியன், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள் கலந்து கொண்டனர். பத்திரிகை ஆசிரியர் சிவசுப்பிரமணியன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்

– நன்றி Mayiladuthurai News

மயிலாடுதுறையில் விழுதுகள் இரத்ததான சேவை மையத்தின் இரத்ததான முகாம்

மயிலாடுதுறை அக்.21: உலகம் முழுவதும் ஒவ்வொரு இரண்டு நொடிகளுக்கும் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு ரத்தம் அவசரமாகவும், அவசியமாகவும் தேவைப்படும். விபத்தில் மனிதர்கள் உயிரிழப்பதற்கு முக்கியக் காரணம் ரத்த சேதமாகும். உடனடியாக இந்த இழப்பைச் சரிசெய்வதன் மூலம் உயிர் காக்கப்படும்.

எனவே இரத்ததானத்தின் அவசியத்தை வலியுறுத்தி மயிலாடுதுறையில் உள்ள கல்லூரி மாணவர்கள் இணைத்து உருவாக்கிய அமைப்பே விழுதுகள் இரத்ததான சேவை மையம். இந்த அமைப்பின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல உயிர்கள் காப்பற்றபட்டுள்ளன என்பதே நிதர்சனமான உண்மை.

21.10.2018 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை, மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் அருகே ROA சங்க அலுவலகத்தில் விழுதுகள் இரத்ததான சேவை மையத்தின் இரத்ததான முகாம் மற்றும் விழுதுகள் அமைப்பின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இரத்ததான முகாமை ஸ்டார் மீடியா உரிமையாளர் உமர் துவக்கி வைத்தார். பல இளைஞர்கள் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்தனர். இந்த முகாமில் 55 யூனிட் இரத்தம் பெறப்பட்டு மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையின் அரசு மருத்துவர் Dr. சிவக்குமார் M.D மற்றும் செவிலியர்கள் மூலம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் விழுதுகள் அமைப்பின் தலைவர் தமிழரசன், செயலாளர் சூர்யா, பொருளாளர் ராகுல் ராஜ், உறுப்பினர்கள் மற்றும் திரளான பொதுமக்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

– நன்றி Mayiladuthurai News

மயிலாடுதுறையில் உதவி தொகையுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி

மயிலாடுதுறை அக்.21: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) மற்றும் கட்டுமான தொழில் வளர்ச்சிக்குழுமம் (CIDC) இணைந்து நடத்தக்கூடிய உதவித்தொகையுடன் இளைஞர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் 18 வயது முதல் 40 வயது வரை யாவரும் பங்கேற்கலாம்.

வேலைவாய்ப்பு பயிற்சிகள்:

  • கட்டுமான வேலை ( Mason General)
  • அசிஸ்டெண்ட் எலக்ட்ரீசியன் ( Assistant Electrician)
  • கம்பி வேலை செய்பவர் (Bar Bender & Steel Fixer )
  • கட்டுமான வேலை டைல்ஸ் கல் பதிப்பது (Mason Tiling)
  • பிளம்பர் ( Plumber)
  • கட்டிட பெயிண்டர் மற்றும் டெகரேட்டர் ( Construction painter & Decorator )

தேவையான ஆவணங்கள்:

கல்வி தகுதி சான்றிதழ், முகவரி சான்று, அடையாள சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 4

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
IAT தொழிற் பயிற்சி நிறுவனம்
M. A. ரசாக் டவர், இரண்டாவது தளம், கச்சேரி ரோடு, மயிலாடுதுறை.
தொலைபேசி: 9842415073

– நன்றி Mayiladuthurai News

நம்ம ஊரு சாதனை பெண்மணி

தன் மகளின் மருத்துவ கனவை நனவாக்கிய மயிலாடுதுறையின் பெண் கூலித்தொழிலாளி

இவர்தாங்க நம்ம மயிலாடுதுறையின் சாதனை பெண்மணி ராஜாமணி. மயிலாடுதுறை இராணி மஹால் அருகில் தட்டாரத்தெருவில் வசித்து வருகிறார். மயிலாடுதுறை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டி கழுவி சுத்தம் செய்து தரும் கூலித்தொழிலாளி. தற்போது 44 வயதாகும் ராஜாமணிக்கு 2 குழந்தைகள். மூத்த பையன் இரத்த சுரப்பி வளர்ச்சி இல்லாததினால் உடல் ஊனமுற்று வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். இரண்டாவது மகள் விஜயலட்சுமி நான்காம் ஆண்டு மருத்துவம் (Doctor of Medicine) ரஷ்ய நாட்டில் படிக்கிறார். 22 ஆண்டுகளுக்கு முன் மருத்துவ மாணவி விஜயலட்சுமி 11 மாத குழந்தையாக இருக்கும் போது அவரது தந்தை ராஜேந்திரன் இறந்துவிட்டார். தன் கணவனை இழந்துவிட்ட நிலையில் தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பெரும் பொருப்பு ராஜாமணிக்கு. மீனை கழுவி சுத்தம் செய்து தரும் வருமானத்தில் தன் பிள்ளைகளை வளர்த்து வந்தார் ராஜாமணி. தன் வியர்வை சிந்திய உழைப்பால் தற்போது தன் மகளின் மருத்துவ கனவையும் நனவாக்கியுள்ளார். தன் மகளின் மருத்துவ படிப்பிற்காக ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 6 லட்சம் செலவாகிறது. இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாமல் தன் குடியிருக்கும் வீட்டையும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ராஜாமணி.

கனவு என்னும் கரையை நோக்கி
ஆசை என்னும் அலைகளை கண்டுகொள்ளாமல்,
அறிவுரை என்னும் ஆழத்தை நினைக்காமல்,
கஷ்டங்கள் பல கண்டாலும்
கலங்கரை விளக்கின் வெளிச்சத்தை(மருத்துவ கனவு) மனதில் கொண்டு,
கடந்து வந்த பாதையை நினைத்து கவலைபடாமல்
கரைதொடும் நேரம் தூரம் இல்லை என நினைக்கும்,
உறுதியான மனம் தந்த இறைவா!

அவளின் கனவுகளை கலைக்காமல்
ஒவ்வொன்றாய் நனவாக்கவே
இறைவா நீ அவளை
எனக்களித்தாய்!

– நன்றி Mayiladuthurai News

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்