செவ். பிப் 19th, 2019

கோவக்காய்

உடல் சோர்வு நீங்கி நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்க

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

‌தலைப்பு :
————
உடல் சோர்வு நீங்கி நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்க
——————————————————
காய் : கோவக்காய் + காரட் பச்சடி

————————————
சத்துக்கள்
———
வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன

தீர்வு
—–
கோவக்காய் (50 கிராம்) ,
கேரட் (50 கிராம்) ,பீட்ரூட்(25கிராம்) ,
முள்ளங்கி (25 கிராம்) , மிளகுத் தூள் , சீரகத் தூள், மஞ்சள் தூள் மூன்றும் (தேவையான அளவு) , மல்லித் தழை , கறிவேப்பிலை மற்றும் புதினா மூன்றும் சேர்த்து (1கைப்பிடி) ,பூண்டு(2) ,
பெருங்காயம் (சிறிதளவு) , எலுமிச்சம் பழச் சாறு தோலோடு(1),

செய்முறை
————-
முதலில் கோவக்காய் , முள்ளங்கி , கேரட் , பீடரூட் ஆகியவற்றை நன்றாக கழுவி சிறியதாக நறுக்கி அதனுடன் மிளகுத் தூள் , சீரகத் தூள் ,மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து கறிவேப்பிலை , புதினா , மல்லித்தழை , பூண்டு ஆகியவற்றை சிறிதாக நறுக்கி அனைத்தையும் ஒன்றாக கலந்து அவற்றில் எலுமிச்சம் பழச் சாறுஊற்றி பெருங்காயத் தூளையும் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு வேளை உணவாக இதனை சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து உடல் ஆரோக்கியமாக திகழும்.

பச்சை பட்டாணியை தினசரி உணவில் சேர்த்து கொண்டு வரும் பொழுது இவற்றில் உள்ள இரும்புசத்து அதிகம் இருப்பதால் நம் உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகையை போக்கி உடல் சோர்வையும் நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது .

இரவு படுக்கப் போகும் முன்
—————————–
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
——–
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமூதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
புதன் 06 பிப்ரவரி 2019

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

தோல் சார்ந்த பிரச்சனைகள் தீர….

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
தோல் சார்ந்த பிரச்சனைகள் தீர
—————————————
காய் : கோவக்காய்
———————-
————————–
சத்துக்கள்
——————–
வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன

தீர்வு
———————————–
கோவைக்காய் (10) , கத்தரிக்காய்
(2 இளம் பிஞ்சுகாய்) , பீர்க்கங்காய் (150 கிராம் ) , வெற்றிலை (2) , புதினா (சிறிதளவு) இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு மோர் அல்லது தண்ணீர் நிறைய ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு காலை முதல் மாலை வரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும் . தீர்ந்துவிட்டால் மறுபடியும் தயார் செய்து குடித்து வரவும்.

கோவைக்காயை நீராவியில் வேக வைத்து பொறியலாக செய்து அவற்றில் தேங்காயை அதிகமாகப் போட்டு உணவிற்கு அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்

பின்பு பசித்தால் உணவு எடுத்துக்கொள்ளுங்கள்

மேற்பூச்சு
—————————————–
இரணக் கள்ளி செடியின் சமூலத்தை எடுத்து இடித்து சாறு (500 மில்லி) , தேங்காய் எண்ணை (400 மில்லி) , அதனுடன் கஸ்தூரி மஞ்சள் (10 கிராம்) , நீரடிமுத்து (20 கிராம்) , கார்போக அரிசி
(30 கிராம்) , மஞ்சள் (40 கிராம்) , கசகசா
(5 கிராம்) சேர்த்து இடித்து அனைத்தையும் ஒன்றாக கலந்து அடுப்பில் சிறு தீயாக கொதிக்க வைத்து சாறு சுண்டிய பின்னர் வடிகட்டி வைத்துக் கொண்டு, காலையில் எழுந்து சர்மநோய் உடையவர் தலை முதல் கால் வரை மேலுக்குப் பூசி அரைமணி நேரம் ஊரவைத்துப் பின்னர் இளஞ்சூடான நீரில் சீயக்காய்த் தூள் போட்டுக் குளித்துவந்தால் குட்டம், மேகநீர், ஊரல் படை, கருமேகநீர், சம்பந்தமான சர்ம நோய், செம்மேகப்படை, கிரந்தி நோய்கள் அனைத்தும் நீங்கும்.

இரவு படுக்கப் போகும் முன்
————————————————–
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
செவ்வாய் 11 டிசம்பர் 2018

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
-தகவல் – கிராமத்தான் முயாஷா.

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்