வி. அக் 24th, 2019

தேர்தல்.

விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை தேவை.

தேர்தல் ஜனநாயக முறை,
குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே பயனளிக்கிற தன்மை கொண்டதாக மாறிவிட்டது. பண பலம், ஆள் பலம், மாபியா பலம், ஊடக பலம் யாரிடம் இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே தேர்தலில் வெற்றி பெறமுடியும். நீங்கள், 300 கொடுத்தால் அவர், 500 கொடுத்து உங்களை தோற்கடித்துவிடுவார். இதுதான், இன்றைய விசித்திர நிலை.அதுமட்டுமல்லாமல்,

தேர்தல் முடிவுக்குப் பின்னர், ‘எங்களுக்கு இத்தனை சதவீத ஓட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால், போதுமான இடங்கள் கிடைக்கவில்லை’ என்று பல கட்சிகள் புள்ளி விபரங்களை சொல்லி புலம்புவதை கேட்கிறோம். இந்த விசித்திரத்துக்கும், புலம்பலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு, நமது தேர்தல் முறையை, விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையாக மாற்ற வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, ஒவ்வொரு ஓட்டுக்கும் உண்மையான மதிப்பு கிடைக்கும். ஒரு தொகுதியில் அதிக ஓட்டு பெற்றவரே வெற்றி பெற்றவர். மேலோட்டமாக பார்த்தால், இதில் தவறு இருப்பதாக தெரியாது. ஆனால்,

பதிவான ஓட்டுகளில், 30 சதவீத ஓட்டுகளை பெற்று, முதல் இடத்தை பிடிப்பது இப்போது சகஜமாகி விட்டது. அதாவது, ஜெயித்தவர், 30 சதவீதம் பெற்றிருப்பார். அதன் அர்த்தம் என்ன? 70 சதவீதம் பேருக்கு அவரை பிடிக்கவில்லை. ஆனால், அவருக்கு எதிராக, ஏழு பேர் நின்றதால், அந்த, 70 சதவீத ஓட்டுகள் அவர்களுக்கு ஆளுக்கு, 10 சதவீதமாக விழுந்திருக்கும். சுருக்கமாக சொல்லப் போனால், 30 சதவீத ஓட்டுக்கு மதிப்பு கொடுத்து அவரை, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., ஆக்குகிறது நமது தேர்தல் முறை. ஆனால், 70 சதவீத வாக்காளர்களின் ஓட்டுகளுக்கு எந்த மதிப்பும் தரவில்லை.

கடந்த, 1989 லோக்சபா தேர்தலில், தி.மு.க., 31 இடங்களில் போட்டியிட்டு, அனைத்திலும் தோற்றது. ஆனால், அந்த கட்சிக்கு, 70 லட்சம் பேர் ஓட்டு போட்டு இருந்தனர். 1990 தேர்தலிலும், தி.மு.க., 29 தொகுதிகளில் போட்டியிட்டு, 56 லட்சம் ஓட்டுக்கள் வாங்கியும், ஒரு இடம்கூட ஜெயிக்கவில்லை. 2014 லோக்சபா தேர்தலில், தி.மு.க., 24 சதவீத ஓட்டு பெற்றது; 95 லட்சம் பேர், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டிருந்தனர். எனினும், ஒரு எம்.பி., கூட கிடைக்கவில்லை. மாறாக, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெற்ற ஓட்டுக்கள், 17 கோடியே, 16 லட்சத்து, 37 ஆயிரத்து 684. இது மொத்த ஓட்டுக்களில், 31 சதவீதம்தான். ஆனால், அக்கட்சிக்கு, 282 எம்.பி.க்கள் இருந்தனர். இது மொத்தமுள்ள, எம்.பி.,க்களின் எண்ணிக்கையில், 51.9 சதவீதம்.அதே போல் காங்கிரசுக்கு, 10 கோடியே, 69 லட்சத்து, 35 ஆயிரத்து, 311ஓட்டுக்கள் கிடைத்தன. இது, 19.3 சதவீதம். ஆனால், காங்., — எம்.பி.,க்களின் எண்ணிக்கை, 44 மட்டுமே. அந்த தேர்தலில், உ.பி.,யில், 20 சதவீத ஓட்டுக்களை பெற்ற, பகுஜன் சமாஜ் கட்சிக்கு, ஒரு எம்.பி., கூட கிடைக்கவில்லை.

விகிதாச்சார தேர்தல் முறையில்,
ஒவ்வொரு கட்சியும் பெற்ற ஓட்டு விகிதத்துக்கு ஏற்ப, சட்டசபை மற்றும் பார்லிமென்டில் இடங்கள் வழங்கப்படுகின்றன. சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை, 100 என வைத்துக்கொண்டால், 1 சதவீத ஓட்டு பெற்ற ஒரு கட்சிக்கு, ஒரு இடம் கிடைப்பது உறுதி. பிரதிநிதிகள் பட்டியலை கட்சிகள் முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். கட்சிக்கு கிடைக்கும் மொத்த ஓட்டுக்களுக்கு, ஏற்ப ஏற்கனவே கட்சி அளித்துள்ள பெயர் பட்டியல்படி,எம்.பி., — எம்.எல்.ஏ.க்கள் அறிவிக்கப்படுவார்கள். தனித்து ஆட்சி அமைக்க, ‘மெஜாரிட்டி’ வராவிட்டால், ஒரே எண்ணம் கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம். அரசியல், ஒரு, ‘பிசினசாகும்’ ஆபத்தை தடுக்க வேண்டும்; ரஷ்யா, ஜெர்மனி ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், நார்வே, ஸ்பெயின், சுவீடன், சுவிஸ், பிரேசில், வெனிசுலா உள்பட பல நாடுகளில் விகிதாச்சார தேர்தல் முறையே நடைமுறையில் உள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இம்முறையையே பின்பற்றுகின்றன.
இலங்கை, இம்முறையில் தான், எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்கிறது. கடந்த, 1932 ல் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலில், 33.1 ஓட்டுக்களை பெற்றே ஹிட்லர் அதிபராக வந்தார். 1949ம் ஆண்டு அந்த நாட்டில், விகிதாச்சார தேர்தல் முறை வந்தது. விகிதாச்சார பிரதிநிதித்துவம் கொண்ட ஜனநாயக ஆட்சி தான் சிறந்தது என்ற நம்பிக்கை, அன்று முதல் பரவலானது. அப்படி மாறுவது, இங்குள்ள பல்வேறு சமூகங்களின் அச்சத்தை அகற்றுவதுடன், நாட்டின் எதிர்கால குழப்பங்களுக்கான தீர்வாகவும் அமையும் என்பது, 1928ம் ஆண்டு நேருவின் கருத்தாக இருந்தது.

பின்னர் அவர் பார்வை மாறியது வேறுவிஷயம். 1962 ல் கோவையில் நடைபெற்ற, தி.மு.க., பொதுக்குழுவிலும், மாநாட்டிலும், தேர்தல் அறிக்கையிலும் இந்தியாவுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று அண்ணாதுரை வலியுறுத்தினார். 1974ம் ஆண்டு, ஜெயபிரகாஷ் நாராயணனால் நியமிக்கப்பட்ட தார்க்குண்டே குழு ஜெர்மனியில் இருப்பது போன்ற தேர்தல் முறை இந்தியாவுக்கு வேண்டும் என பரிந்துரைத்தது.
அதன் பிறகு, தினேஷ் கோஷ்சுவாமி குழு (1990), வோரா கமிட்டி (1993), இந்திரஜித் குப்தா குழு (1998), தேர்தல் சட்ட திருத்தத்தின் மீதான சட்ட ஆணையத்தின், 170வது அறிக்கை (1999), அரசியல் சாசன நடைமுறை மறு ஆய்வுக்கான தேசிய ஆணையம் (2001), இந்திய தேர்தல் ஆணையத்தால் முன்னுரைக்கப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் (2004), நிர்வாக சீர்திருத்த, இரண்டாவது ஆணையம் (2008), மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தலைமையிலான இந்திய சட்ட ஆணையம் (2011) ஆகிய அனைத்தும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறித்து நீண்ட ஆய்வை சமர்பித்தன.எனினும், எந்த மாற்றமும் நிகழவில்லை. விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை வந்தால்,

அனைத்து ஓட்டுகளும் மதிப்பு பெறும். பணபலம், ரவுடியிசம், சாதி, மதவெறி குறைய வாய்ப்பு ஏற்படும். அவரவர் ஜாதி ஆதரவின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் பெறக்கூடும் என்றாலும், மாகாணம் முழுவதும் சிதறிக்கிடக்கிற ஜாதிகளும், சிறிய ஜாதிகளும் எளிதில் பிரதிநிதித்துவம் பெற முடியும்.
இந்தியா போன்ற பல்வேறு மொழிகள், இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாச்சார ஓட்டுரிமை நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவில் இப்போதுள்ள தேர்தல் முறையை பின்பற்றிய, 89 நாடுகள், இன்று விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கு மாறி விட்டன. உலகில் பெரும்பாலான நாடுகளில் அந்த நடைமுறைதான் உள்ளது. ஒவ்வொரு துறையிலும் முன்னேறுவதாக சொல்லப்படும் நமது நாடு, அனைத்து துறைகளுக்கும் தாயான, தேர்தல் துறையில் தேர்தல் முறையில் பின்தங்கி நிற்கலாமா? விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை கொண்டுவர கட்சிகளுக்கு நாம்தான் அழுத்தம் கொடுக்க வேண்டும். நாம் போடும் ஓட்டுக்கு மரியாதை வேண்டுமா, வேண்டாமா? யோசியுங்கள்.
நன்றி-ப.திருமலை, பத்திரிகையாளர்

நோட்டா மிகப்பெரிய ஏமாற்று வேலை.

நோட்டா மிகப்பெரிய ஏமாற்று வேலை
https://youtu.be/grV2cmuPqVo

தேர்தல் சட்டம் தொடர்பான Youtube
பதிவுகள்

தேர்தலில் குற்றம் அதிகரிக்க காரணம் என்ன ???
https://youtu.be/vhq5lpq7bNs

ஒட்டுக்கு லஞ்சம் குற்றமா ???
https://youtu.be/_Onp0iqqqHc

கள்ள ஓட்டு உங்கள் பங்கு
https://youtu.be/WBHU5Q6Hl4c

பொய் பிரச்சாரம்
https://youtu.be/ucUZzEPjIhY

அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தினால் தண்டனை ???

MP தேர்தலில் போட்டியிட என்ன தேவை
https://youtu.be/I40gt4uqKLo

வாக்காளர் அடையாள அட்டை இருக்கு வாக்களர் பட்டியலில் பெயர் இல்லை ஓட்டு போட முடியுமா ???
தீர்வு என்ன ???

வேட்பு மனு முன்மொழிதல் சட்ட சிக்கல்கள்
https://youtu.be/7Ke5jqN0ywI

வேட்பு மனு சட்ட விளக்கம்
https://youtu.be/KJauWQPMxog

நடிகர் விஜய் + தேர்தல் ஆணையகத்தின் ஏமாற்று வேலை – தேர்தல் சட்டம்49 p
https://youtu.be/w864ooYmmwg

வேட்பு மனு தாக்கல் செய்ய எத்தனை நபர்கள் செல்லலாம்
https://youtu.be/-votEEMF4rk

சுழற்றியடிக்கும் இந்திய தேர்தல் சட்டம்

வாக்கு சாவடியில் எப்படி தேர்தல் நடைபெறும்
https://youtu.be/Cym14M7FSrc

ஆத்தா நான் சப்பானிக்கு ஓட்டு போட போறேன் – மயிலு
செல்லாது செல்லாது வெளியே போம்மா _ தேர்தல் அதிகாரி
https://youtu.be/oRzXh0c5B80

ஒரே நபர் அவரின் 2-வது ஒட்டினை போட்டால் குற்றமா???

தேர்தல் சட்டம் 49 ஓ
https://youtu.be/yhsrx4rmjN4

நமது பதிவுகள்
https://www.youtube.com/channel/UCqKIFnD7BqLyG99OCaKp8Tg

Thanks for Information
திரு. நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர்.

(https://www.facebook.com/groups/453406141356664/?ref=bookmarks)

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்