வயிற்றுப் பூச்சிகள் வெளித்தள்ளப்பட்டு வயிறு சுத்தம் மற்றும் உடல் ஆரோக்கியம் உண்டாக.
—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—
காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!
உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே….!
தலைப்பு :
————
வயிற்றுப் பூச்சிகள் வெளித்தள்ளப்பட்டு வயிறு சுத்தம் மற்றும் உடல் ஆரோக்கியம் உண்டாக
————————————————————————————————
காய் : பீர்க்கங்காய்
——————–
சத்துக்கள்
———
நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் உள்ளன.
தீர்வு
——
பீர்க்கங்காய் (100 கிராம்) ஒன்றைத் தோலுடன் சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு நான்கு டம்ளர் நீர்விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி அதனோடு சுவைக்காகப் போதிய உப்பிட்டு தினமும் காலை, மாலை என இரு வேளை பருகி வந்தால் வயிற்றினுள் பல்கிப் பெருகித் துன்பம் தருகின்ற வயிற்றுப் பூச்சிகள் வெளித்தள்ளப்பட்டு வயிறு சுத்தம் மற்றும் உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
ஆடுதீண்டாப் பாளையை நிழலில் உலர்த்தி நன்றாக பொடி செய்து வைத்துக் கொண்டு (1ஸ்பூன்) அளவு எடுத்து அதில் தேன் கலந்து இரவு படுக்கப்போகும் முன் கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் விரைவில் நீங்கும்.
இரவு படுக்கப் போகும் முன்
—————————–
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
——–
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்
வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609
Covaibala15@gmail.com
சமூதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
திங்கள் 11 பிப்ரவரி 2019
(https://www.facebook.com/keezhmandur/)
தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் லஇணைந்து சேவையாற்றிவீர்…!
https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3
மற்றும் / அல்லது
https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.